Actress Taapsee Pannu: "சிக்ஸ் பேக்” தோற்றம்.. அசால்ட் காட்டிய நடிகை டாப்ஸி.. ஷாக்கான பிரபலங்கள்..!
மிகத் தீவிரமான உடற்பயிற்சிக்கு பிறகு நடிகை டாப்ஸி தனது தோற்றத்தை சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

மிகத் தீவிரமான உடற்பயிற்சிக்கு பிறகு நடிகை டாப்ஸி தனது தோற்றத்தை சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டாப்ஸி
கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜும்மாண்டி நாதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இவரை 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா-2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி என சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழை விட இந்தியில் அதிகப் படங்களில் நடித்துள்ள டாப்ஸி பிற மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் ஜன கன மண, ஏலியன், அதேபோல் இந்தியில் வோ லட்கி ஹை கஹான், டங்கி, ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா படங்களும் கைவசம் உள்ளது.
டயட்டில் அதிக கவனம்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நான் என் வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன், என்ன படம் நடிக்கிறேன் என்பதை பொறுத்து என் உணவு முறையானது மாற்றம் பெறுகிறது. இதனால் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மாற்றம் நிகழ்வதை காண முடிகிறது. நடிப்பு தொழிலில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு நமக்கு எது சிறந்த உணவு என்பதை சொல்ல ஒரு நிபுணர் தேவைப்படுகிறார். நான் என்னுடைய டயட்டீஷியன் நிபுணருக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்கிறேன். இது என்னுடைய வேலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் அப்பாவுக்கு தெரிந்தால் திட்டுவார்.
View this post on Instagram
“சிக்ஸ் பேக்” டாப்ஸி
இந்நிலையில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் டாப்ஸி தனது சிக்ஸ் பேக் உடலை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது ஜிம் பயிற்சியாளருடன் கருப்பு நிற உடையுடன் தோன்றிய புகைப்படத்தை வெளொயிட்டுள்ள டாப்ஸி, அதில், “பல மாதங்களாக கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இனிமேல் நான் பூரியையும், ரொட்டியும் சாப்பிடுவேன்” என மகிழ்ச்சியுடன் டாப்ஸி தெரிவித்துள்ளார். அவரது உடற்பயிற்சிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

