Shruti Haasan Update: முதன் முதலில் காதலன் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்! - வைரல் வீடியோ
கடந்த சில நாட்களாகவே ஸ்ருதிஹாசன் ஒரு குறிபிட்ட நபருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யோகா மற்றும் நடனம் செய்து அந்த வீடியோக்காட்சிகளை வெளியிட்டு வந்தார்.
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். பாடகியான இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கெல் கார்சல் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்களது காதல் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அந்தக் காதல் முறிவு குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், “காதலுக்கு விதி என்றும் எதுவும் இல்லை. காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவருவதாக தகவல் வெளியாகியது.
View this post on Instagram
கடந்த சில நாட்களாகவே ஸ்ருதிஹாசன் ஒரு குறிபிட்ட நபருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யோகா மற்றும் நடனம் செய்து அந்த வீடியோக்காட்சிகளை வெளியிட்டு வந்தார். இவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யார் அந்த நபர் என்றும், அவர்தான் தங்கள் காதலரா என்றும் கேள்வி எழுப்பினர். கடைசிவரை யார் அந்த நபர் குறித்து அமைதிக்காத்து வந்த ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முதலாக வாய் திறந்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், இவர் தான் காதலன் சாந்தனு என்றும் இவரிடம் நான்தான் முதன் முதலாக காதலை வெளிபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்