Watch Video | "ராதா.. நீ இப்படியே இரு..." : ஸ்ரேயாவும், குழந்தை ராதாவின் க்யூட் சேட்டையும்..
பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய குழந்தையின் சுட்டித்தனத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் “எனக்கு 20 உனக்கு 18” படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகையாக வழம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரேயா.
பின்னர் ஸ்ரேயாவும், ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆண்ட்ரி கோஷிவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் ரகசியமாக மும்பையில் கடந்த 2018 மார்ச் 12 நடைபெற்றது. ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி நடந்த இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனை அடுத்து நடிகை ஸ்ரேயா சமூக ஊடகங்களில் கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
View this post on Instagram
ஸ்ரேயா சரண் மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரி கோஷீவ் சமூக ஊடகங்களில் தன் மகளின் சுட்டித்தன வீடியோக்களை பதிவது வழக்கம். அது போல இன்றும் ஸ்ரேயா தனது பெண் குழந்தையான “ராதா” -வின் மழலைப் பேச்சுகளையும், சுட்டித்தனத்தையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.
"நீ எனக்கு முடிவில்லா மகிழ்ச்சியைத் தருகின்றாய், என் இதயம் என்றும் உன்னுடையது" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஸ்ரேயா சரண் மகள் ராதாவுடன் மகிழ்ச்சியான புகைப் படங்களையும் பகிர்ந்து உள்ளார்.
சமீபத்தில், தனது மகள் ராதாவின் முதல் பிறாந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா, அந்த பிறந்தநாளிலும் இதயப்பூர்வமாக பதிவு இட்டிருந்தார். தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை அடுத்து வீட்டில் கணவர் மற்றும் குழந்தையுடன் பீச்சில் குளித்து கொண்டே குழந்தையின் புகைப்படங்களையும் குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பதிவு செய்தார். அதில் “இன்று எனது குழந்தைக்கு 1 வயதாகிறது. கடந்த ஆண்டு 7:40 மணிக்கு உலகிற்கு வந்தாள், அவள் எங்ளது இதயங்களை நிரந்தர மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறாள், உங்கள் அன்புக்கு நன்றி, அம்மா அப்பா மற்றும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி”என பதிவிட்டிருந்தார்.