Actress Samantha: பாலிவுட் டார்கெட்! 6 கோடிக்கு வீடு! மாஸ் ப்ளானுடன் மும்பைக்கு குடியேறும் சமந்தா.!
தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் கவனத்தை திருப்பியுள்ளார் சமந்தா.
‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே செம ஹிட்டடித்தது. முக்கியமாக சமந்தா இந்த பாடலுக்கு ஆடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பாடலும் எதிர்பார்ப்பை மீறி நன்றாக இருந்ததால், பட்டிதொட்டியெல்லாம் பாடல் பட்டையை கிளப்பியது.
ஏற்கெனவே, தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார். இந்தப்பாடலுக்கு சமந்தா போல் நடனம் ஆடி பல வெளிநாட்டினவர்களும் வீடியோ வெளியிட்டனர்.
நடிகர் நாகசைதன்யாவுடனான மன உறவை முறித்துக்கொண்ட சமந்தா தொடர்ச்சியாக படங்களில் பிஸியாகி உள்ளார். யசோதா, சகுந்தலம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் கவனத்தை திருப்பியுள்ளார் சமந்தா. வருண் தவன் படத்திலும் நடிக்கவுள்ளார். அதேபோல் இந்தி வெப் சீரிஸிலும் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
View this post on Instagram
வீடு..
இந்நிலையில் மும்பையில் சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளார் சமந்தா. மும்பையின் ஜூஹு கடற்கரை பகுதியில் ரூ.6 கோடிக்கு சொகுசு வீடு வாங்கவுள்ளதாகவும் இனி மும்பைதான் திட்டம் என்பதால் இந்த முடிவை சமந்தா எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இதற்கிடையே நடிகர் நாதசைதன்யாவையும், நடிகை சமந்தாவையும் இணைந்து நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு இயக்குநரான நந்தினி ரெட்டி இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சமந்தாவின், ஜபர்தஸ்த், ஓ பேபி உள்ளிட்ட படங்ககளை இயக்கிய இவர் தனது அடுத்தப்படத்தில் இருவரையும் ஒன்றாக நடிக்கவைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.