நீச்சல் உடையில் தங்கையுடன் சாய் பல்லவி புகைப்படம் வைரல்...வன்மத்தை கொட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
Sai Pallavi : நீச்சல் உடையில் நடிகை சாய் பல்லவி தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன

நடிகை சாய் பல்லவி தனது தங்கையுடன் சுற்றுலாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. நீச்சல் உடை அணிந்ததற்காக சாய் பல்லவியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில் பலர் சாய் பல்லவிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
சாய் பல்லவி
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் நடிகை சாய் பல்லவி. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி என நான்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தியில் ராமாயணா படத்தில் நடித்து வருகிறார். நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்க சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் நடிப்பது பிடிக்காத சிலர் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான சர்ச்சைகளை தொடர்ந்து கிளப்பி வருகிறார்கள். ராமாயணா படத்தில் நடிப்பதால் சாய் பல்லவி அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திக்கு சாய் பல்லவி மிக கடுமையாக எதிர்வினையாற்றினார்.
நீச்சல் உடையில் சாய் பல்லவி
பிற நடிகைகளைப் போல் இல்லாமல் தொடர்ச்சியாக கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து மட்டுமே நடித்து வருகிறார் சாய் பல்லவி. இதனால் அவருக்கு ரசிகர்களிடையே அவருக்கு நல்ல மதிப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் சாய் பல்லவி தனது சகோதரியுடன் சுற்றுலாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சாய் பல்லவி தனது தங்கையுடன் நீச்சல் உடையில் காணப்படுகிறார். இந்த புகைப்படங்களை பகிர்ந்த சிலர் சாய் பல்லவியின் உடைக்காக அவரை விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு சாய் பல்லவி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
View this post on Instagram
தற்போது சாய் பல்லவியின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அதை விமர்சித்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்





















