Raveena Tandon: பெண்கள் மீது மோதிய கார்! சுற்றி வளைத்த பொதுமக்கள்! கேஜிஎஃப் நடிகைக்கு செம அடி!
Raveena Tandon Attacked: பிரபல நடிகையான ரவீனாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது மற்றும் தாக்குதல் நடத்துவது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரவீனா டாண்டன்
தமிழ் சினிமாவில் ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் 90களின் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். மும்பையைச் சேர்ந்தவரான ரவீனா டாண்டன், இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். முன்னதாக கேஜிஎஃப் படத்தில் ரமிகா சென் எனும் கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் யஷ்ஷூக்கு சரிசமமாக மாஸ் காண்பித்து, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தார்.
தற்போது தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரவீனா டாண்டன் மீது மும்பை, பாந்திரா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோதிய ஓட்டுநர்.. சுற்றிவளைத்த பொதுமக்கள்
கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கார்ட்டர் சாலையில் ரவீனா டாண்டனின் கார் ஓட்டுநர், வேகமாக ஓட்டிச் சென்று சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பெண்களின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனத்தில் இருந்து இறங்கி வந்த நடிகை ரவீனா, அப்பெண்களுடன் தன் ஓட்டுநருக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமடைந்த அங்கிருந்த நபர்கள் ரவீனா டாண்டனை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி வீடியோ
பிரபல நடிகையான ரவீனாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது மற்றும் தாக்குதல் நடத்துவது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரவீனா டாண்டன் இந்த வீடியோவில் என்னைத் தாக்காதீர்கள் என தன்னை சுற்றியிருப்பவர்களிடம் கெஞ்சுகிறார்.
Allegations of Assault by #RaveenaTandon & her driver on elderly Woman Incident near Rizvi law college, family Claims that @TandonRaveena was under influence of Alcohol, women have got head injuries, Family is at Khar Police station @MumbaiPolice @CPMumbaiPolice @mieknathshinde pic.twitter.com/eZ0YQxvW3g
— Mohsin shaikh 🇮🇳 (@mohsinofficail) June 1, 2024
வைரலாகும் இந்த வீடியோ குறித்து ரவீனா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ரவீனா தான் குடித்துவிட்டு காரை ஓட்டிச் சென்று பெண்கள் மீது ஏற்றியதாகவும் தகவகள் வெளியாகி வருகின்றன.
PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!