Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காக தனக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு சான்வி ஜோசப் என்ற கன்னட படம் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் கீத கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
தேசிய விருது:
புஷ்பா படம் தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடித்தது. பின்னர், அனிமல் என்ற நேரடி இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டிலும் பிரபலம் ஆனார். இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார்.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்காக ராஷ்மிகா மந்தனா ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, “ எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டிருப்பதால் ப்ரமோஷன்களில் அவர் பங்கேற்கவில்லை. புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்தது. புஷ்பா 2ம் பாகத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். ஒருவேளை கிடைத்தால் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
புஷ்பா 2ம் பாகம்:
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில், அனசுயா பரத்வாஜ், அஜய் கோஷ், தனஞ்ஜெயா, சண்முக் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக பகத் பாசில் நடித்துள்ளார். புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் புஷ்பா 2ம் பாகம் 400 கோடி முதல் 500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.