Raiza Face : பொலிவாக மாறிய முகம்.. ரைசா இப்ப ஹேப்பி அண்ணாச்சி
சிகிச்சை தனக்கு பலன் அளிக்கவில்லை என்றும் மாறாக தனது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் ரைசா கூறினார்.
முகப்பொலிவு சிகிச்சையால் தனது முகம் வீங்கிப்போனதாக குற்றம் சாட்டி மருத்துவர் மீது வழக்கு தொடரும் நிலை அளவுக்கு சென்றவர் நடிகை ரைசா. அவர் தனது லேட்டஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பதிவில் மீண்டும் பொலிவாக மாறிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Hey 🙋🏻♀️ pic.twitter.com/Z6xbFYtCEH
— Raiza Wilson (@raizawilson) May 18, 2021
நடிகை ரைசா முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலை அணுகியுள்ளார். அப்போது பைரவி செந்தில், ரைசாவிற்கு 'Botox Treatment' என்ற சிகிச்சை வழங்க பரிந்துரை செய்துள்ளார். மேலும் அந்த 'Botox Treatment' ரைசாவின் முகப்பொலிவுக்கு மிகவும் ஏதுவானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை ரைசா வில்சனுக்கு மேற்குறிப்பிட்ட இந்த சிகிச்சை 25.03.2021 அன்று டாக்டர் பைரவி செந்திலின் உதவியாளர்கள் டாக்டர் வனிதா மற்றும் மணி என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே பைரவி செந்திலின் உதவியாளர்களிடம் அந்த சிகிச்சையை மேற்கொள்ள ரைசா தயக்கம் கட்டியதாகவும் அந்த லீகல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பைரவி உறுதியளித்ததன் அடிப்படையில் அந்த சிகிச்சை ரைசாவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த சிகிச்சை தனக்கு பலன் அளிக்கவில்லை என்றும் மாறாக தனது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் ரைசா கூறினார். தற்போது மருத்துவர் மீது புகார் அளித்ததோடு பைரவி 15 நாட்களுக்கும் நஷ்டஈடாக 1 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வக்கீல் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ரைசா வில்சன் இந்த பிரச்னையை முன்வைத்தபோது டாக்டர் பைரவி செந்தில், ரைசா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியதும் தற்போது நினைவுகூரத்தக்கது.
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ரைசா
ஊட்டியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ரைசா அதன் பிறகு பெங்களூருவில் தனது பட்டப்படிப்பை முடித்தார். மாடல் அழகியான ரைசா மிஸ் இந்திய சவுத் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று சில பரிசுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக மாடலிங் துறையில் வலம்வந்த ரைசாவிற்கு 2017-ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கஜோலின் அசிஸ்டெண்ட்டாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2021-ஆம் ஆண்டு நடிகை ரைசா வில்சன் காதலிக்க யாருமில்லை, தி சேஸ், ஆலிஸ், எப்.ஐ.ஆர் மற்றும் ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் பிசியாகி நடித்து வருகின்றார். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டே காதலிக்க யாருமில்லை படத்திற்கான வேலைகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ரைசா வில்சன் நாயகியாக களமிறங்க இந்த படத்திற்கு இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.