Raashi Khanna Tamannaah: அரண்மனை 4 ஷூட்டிங் தொடங்கியாச்சு... ஃபோட்டோ பகிர்ந்த ராஷி கண்ணா.. ஹார்ட்டின்விட்ட தமன்னா!
மூன்றாம் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா இந்தப் பாகத்திலும் நடிக்கும் நிலையில், புதிதாக நடிகை தமன்னாவும் இந்த பாகத்தில் இணைந்துள்ளார்.
‘அரண்மனை 4’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை ராஷி கண்ணா புகைப்படம் பகிர்ந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ஹாரர் படங்களின் ட்ரெண்ட் உச்சத்தில் இருந்தபோது இயக்குநர் சுந்தர்.சி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை.
அரண்மனை சீரிஸ்
ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, சுந்தர்.சி, வினய், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வெற்றிபெற்று அந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு த்ரிஷா, ஹன்சிகா, சித்தார்த், சுந்தர்.சி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியானது, ஆனால் கலவையான விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற இந்தப் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ’அரண்மனை 3’ திரைப்படம் கொரோனா ஊரடங்கின் மத்தியில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, ஆர்யா, சாக்ஷி அகர்வால், சுந்தர்.சி. உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது. ஆனால் முந்தைய படங்களுக்கு மாறாக இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
அரண்மனை 4
இதனிடையே இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சென்ற ஆண்டு மல்டி ஸ்டாரர் படமாக வெளியான காஃபி வித் காதல் படம் அவருக்கு பெரிதாகக் கைக்கொடுக்கவில்லை. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, ரைசா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று, தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், மீண்டும் பேய் பட ட்ராக்குக்கே திரும்பியுள்ள சுந்தர்.சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். முந்தைய மூன்றும் பாகங்களிலும் நடித்துள்ள சுந்தர்.சி இந்தப் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.
அதேபோல் மூன்றாம் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, இந்தப் பாகத்திலும் நடிக்கும் நிலையில், புதிதாக நடிகை தமன்னாவும் இந்த பாகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அரண்மனை 4 ஷூட்டிங் தளத்தில் இருந்து நடிகை ராஷி கண்ணா இன்று ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் நடிகை தமன்னா கண்களில் இருந்து ஹார்ட்டின் வரும் எமொஜிக்களைப் பகிர்ந்து கமெண்ட் செய்துள்ளார்.
View this post on Instagram
முன்னதாக அரண்மனை 4 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: 21 Years of Gemini: ஜெயிக்காது என நினைத்த சரண்.. மொட்டை போட்ட ஏவிஎம் சரவணன்.. மெஹா ஹிட் “ஜெமினி” படம் உருவான கதை..!