'அமீர் சொன்னதுக்காக கார்த்தி இப்படி பண்ணாரு” : பருத்திவீரன் ஷூட்டிங் சீக்ரெட்ஸ் சொன்ன பிரியாமணி
பருத்திவீரன் ஷூட்டிங் குறித்து நடிகை ப்ரியாமணி நினைவுகளை பகிர்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கென்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2007ம் ஆண்டு பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பருத்திவீரன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இந்தபடம் அன்றைய தமிழ் சினிமாவில் கிராமப்படங்களை நோக்கி கோலிவுட்டை மீண்டும் அழைத்துச் சென்றது.
View this post on Instagram
இந்நிலையில் பருத்திவீரன் ஷூட்டிங் குறித்து நடிகை ப்ரியாமணி நினைவுகளை பகிர்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில்பேசிய ப்ரியாமணி, ''பருத்திவீரன் கார்த்திக்கு முதல் படம் என்றாலும் ராக்கிங் மாதிரியெல்லாம் எதுவுமில்லை.கார்த்தி வெரி ஸ்வீட்.இப்போது எப்படி இருக்காரே அப்படியேதான் அப்போதும் இருப்பார். அவர் அமீர் சாரிடமேதான் இருப்பார். ஒவ்வொரு காட்சி குறித்தும் அவரிடம் கேட்டு கேட்டு செய்வார். அமீர்சார் எல்லா கேரக்டரையும் நடித்து காட்டுவார். அது ப்ளஸ்பாய்ண்ட். குளத்துல விழவேண்டிய சீனுக்கு முன் கார்த்தி சொம்பச் சோர்வாக ஆகவேண்டும். அப்போது அவருக்கு வியர்த்துகொட்டி சோர்வாக இருந்தது. ஆனாலும் அவரது சட்டை கொஞ்சம் ப்ரஷாக இருந்தது.அதனால் 5 ரவுண்ட் ஓடிவரவேண்டும் என அமீர்கூறிவிட்டார். கார்த்தி உண்மையாக ஓடினார். ஒரு ஆக்டர் இவ்வளவு டெடிகேஷனாக இருந்ததை அதுவரை நான் பார்த்ததில்லை என்றார்.
View this post on Instagram
நடிகர் கார்த்தி மீண்டும்கிராமத்து கெட்டப்பில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் விருமன். விருமன் பட திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” மதுரை என்றாலே ஸ்பெசல் தான். விருமன் 12-ம் ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படம் , கிராமத்தில் உள்ள வீரம் பாசம் கேளிக்கை என்பதே வேறுவகையில் இருக்கும். இது போன்ற கிராமம் சார்ந்த இங்கு வரும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே இயக்குநரிடம் இரு முறை நடித்துள்ளேன். நடிகை அதிதி சிறப்பாக நடித்துள்ளார். என்னைப் போல் அவரும் படித்து முடித்துவிட்டு சினிவிற்கு வந்துள்ளார். பருத்திவீரன் படத்தில் நடிகை பிரியாமணியை பார்த்தது போல் விருமன் படத்தில் அதிதியை பார்க்கிறேன் என்றார்.