மேலும் அறிய

Actress Poorna Wedding: நடிகை பூர்ணாவுக்கு டும் டும் டும்.. துபாயில் நடந்து முடிந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை பூர்ணா திருமண தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பூர்ணா திருமண தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம். மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த பூர்ணா, தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  

சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்ட இவர், அதனைத்தொடர்ந்து கொடைக்கானல், வேலூர் மாவட்டம், துரோகி, தகறாறு, தலைவி, 100  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இவர் தற்போது தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஆஷிஃப் அலியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த பூர்ணாவுக்கு கடந்த மே மாதம் அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிலையில்  துபாயில் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

இது தொடர்பாக பூர்ணா வெளியிட்டு இருக்கும் பதிவில், “ நான் இந்த உலகிலேயே அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம். ஒரு நல்ல மனைவியின் எந்த பண்புகளும் என்னிடம்  இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு போதும் என்னை குறைவாக உணரவில்லை. நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள். என்னை ஒருபோதும் மாற்ற முயற்சிக்கவில்லை. இது என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டு வர என்னை நானே மேலும் உழைக்க ஊக்குவித்தது.

இன்று நமக்கு நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு மத்தியில் நீங்களும் நான் இந்த திருமண வாழ்கையை தொடங்குகிறோம். இது ஒற்றுமையின் அற்புதமான பயணம். இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் உன்னுடன் இன்ப துன்பங்களில் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன் உன்னை நேசிக்கிறேன்." என்று பதிவிட்டு இருக்கிறார். பூர்ணா திருமணம் செய்திருக்கும் தொழிலதிபர் ஆஷிஃப் அலியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget