மேலும் அறிய

Pavni Reddy: அமீர் ஒரு சூப்பர்மேன்.. பாவ்னியை கலாய்த்து கேள்வி கேட்ட ரசிகர்கள்.. அப்படி என்ன சொல்லிட்டாங்க?

நடன இயக்குநர் அமீரின் பிறந்தநாளுக்கு  அவரின் காதலியும், நடிகையுமான பாவ்னி ரெட்டி பதிவிட்டுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடன இயக்குநர் அமீரின் பிறந்தநாளுக்கு  அவரின் காதலியும், நடிகையுமான பாவ்னி ரெட்டி பதிவிட்டுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியலின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பாவ்னி ரெட்டி. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து பாவ்னி கலந்து கொண்டார். முன்னதாக காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்ததே அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. 

இப்படியான நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர், ஆரம்பம் முதலே பாவ்னியுடன் நெருங்கி பழக தொடங்கினார். பாவ்னிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருவரும் சர்ச்சையில் சிக்க தொடங்கினர். அமீரின் காதலை பாவ்னி ஏற்றுக்கொள்ளாத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். 

இதற்கிடையில்,  பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில்  அமீர்- பாவ்னி இருவரும் இணைந்து நடனமாடினர். ஒரு கட்டத்தில், தான் அமீரை கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக கூறியிருந்தார். இப்படியான நிலையில் அந்த நடன நிகழ்ச்சியில் அமீர்-பாவ்னி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதில், அமீரின் காதலை ஏற்றுக் கொள்வதாகவும்,  இருவரும் வாழ்க்கை பயணத்தை தொடங்குவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் இந்த ஜோடி அஜித் நடித்த துணிவு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படியான  நிலையில் அமீர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகை பாவ்னி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “என்னுடைய ஒரே சூப்பர்மேன், மிகவும் ஸ்ட்ராங்கான அயர்ன்மேன், என்னுடைய ஹீரோ, ஹேண்ட்சம், எனது உலகத்தை முழுமைப்படுத்தும் நபருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நான் உன்னிடம் உணரும் அன்பை யாருடனும் ஒப்பிட முடியாது” என தெரிவித்துள்ளார். காதல் என்று வந்து விட்டால் சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் என சொல்லுவீங்களா? என சில இணையவாசிகள் காமெடியாக தெரிவித்துள்ளனர். 

 

தலைப்பு செய்திகள்

Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget