பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலரை காதலிக்கும் நடிகை?.. இவர்தான் அவரா.. வைரலாகும் போட்டோ!
ஜூலியின் முன்னாள் காதலரைத் தான் பிரபல நடிகை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிவேதா பெத்துராஜ். இப்படத்தை தொடர்ந்து தமிழில் டிக் டிக் டிக், சங்கத்தமிழன, பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கிலும் அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் இருப்பதாக பல பேட்டிகளில் அவர் தெரிவித்திருக்கிறார்.
நிவேதா பெத்துராஜ் காதல் கிசுகிசு
கடந்த 2023க்கு பிறகு நிவேதா பெத்துராஜ் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமா பக்கம் தலைகாட்டாமல் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பேட்மிண்டன், கார் பந்தய பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில், உதயநிதியும் நிவேதா பெத்துராஜூவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவரும் இதற்கு விளக்கம் அளித்தது இல்லை. தமிழ்நாட்டில் நடந்த கார் பந்தயத்திலும் நிவேதா பெத்துராஜ் பங்கேற்றார். இச்செய்தி பேசுபொருளானது. உதயநிதி மற்றும் நிவேதா பெத்துராஜையும் இணைத்து வைத்து செய்திகள் அதிகம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலியின் முன்னாள் காதலர்
துபாயில் அவருக்கு வீடு வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை சமூகவலைதளத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரஜித் இப்ரானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலர் என அறிவித்தார். இதற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே, நிவேதா பெத்துராஜின் காதலர் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. ரஜித் இப்ரான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஜூலியின் முன்னாள் காதலர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ரஜித் இப்ரானுடன் இருந்த நாட்கள் அற்புதமானது. அதை மறக்க முடியாது எனது பெஸ்டி என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவரது பெஸ்டியைத் தான் நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்யப் போகிறார். வாழ்த்துகள் மேடம் எனவும் பதிவிட்டுள்ளனர்.





















