எங்கள கீழ வச்சி பாக்குறாங்க...செம போல்டாக பேசிய நித்யா மேனன்
ஒரு படத்தின் நடிகருக்கும் இயக்குநருக்கும் மட்டுமே முதலுரிமை கொடுப்பதும் நடிகைகளை எப்போது இரண்டாம் கட்டமாக பார்க்கும் வழக்கம் சினிமாவில் இருந்து வருவதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார்

நித்யா மேனன்
தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் இவருக்கு பெரிய ஓப்பனிங்காக அமைந்தது . தனுஷூடன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை , தனுஷ் இயக்கியுள்ள இட்லி கடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பல்வேறு கருத்துகளை நித்யா மேனன் பேசி வருகிறார். சினிமாவில் பெண்கள் ஆண்களுக்கு கீழாக நடத்தப்படுவது குறித்து நித்யா மேனன் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இப்டி ஒரு வாழ்க்க வாழனுமா
காதலிக்க நேரமில்லை படத்தின் போஸ்டர்களில் நித்யா மேனனின் பெயரை படக்குழு முதலில் குறிப்பிட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய நித்யா மேனன் இப்படி கூறியுள்ளார் " சினிமாவில் எப்போதும் ஒரு ஏற்றத்தாழ்வு இருந்து தான் வருகிறது. ஒரு படத்தின் ஹீரோ , டைரக்டருக்கு அடுத்தபடியாக தான் ஹீரோயினை வைத்து பார்ப்பார்கள். அப்படி தான் காரவான் வைக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் தான் மேடையில் அழைப்பார்கள். ஒரு ஆரத்தி எடுத்தால் கூட அந்த வரிசையில் தான் உங்களிடம் வருவார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது இப்படி ஒரு குறுகிய மன நிலையுடன் தான் எல்லாரும் வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆணோ பெண்ணோ அவருக்கு சேர வேண்டியா அங்கீகாரத்தை கொடுத்து நார்மலாக இருக்கலான். ஆனால் யாரும் அதை செய்ய மாட்டார்கள்.
"There is always a hierarchy that Actor -> Director -> Actress (Caravan, Called on Stage). They won't even give credits for Women if it's needed. I saw #Jayamravi as Path breaker where he given credit to put Women's name first in #KadhalikkaNeramillai👏♥️" pic.twitter.com/WnvKpBp43L
— AmuthaBharathi (@CinemaWithAB) January 13, 2025
சில நேரம் படப்பிடிப்பில் ஒரு நடிகர் மிக சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஆனால் மொத்த செட் அவருக்காக கை தட்டும். ஆனால் அதே நான் நடித்த ஒரு காட்சியில் (அந்த காட்சி எல்லாருக்கும் பிடித்திருந்தது) நடித்து முடித்தபின் அங்கு அமைதி மட்டும்தான் இருக்கும். யாருமே எதுவும் சொல்ல மாட்டார்கள். காதலிக்க நேரமில்லை படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயரை முதலில் பார்ப்பது ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்திற்கான முயற்சியில் ஜெயம் ரவி எங்களுடன் இருக்கிறார். " என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

