நடிகர் அஜித்தின் அணி துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
அவரின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் அஜித்தின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அஜித் இன்னும் பல வெற்றிகளை அடைந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்தின் வெற்றி பெருமையளிப்பதாக கூறி வாழ்த்தியுள்ளார்.
அஜித்தின் Good Bad Ugly திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் அன்பை பகிரும் விதமாக எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ‘AK Sir' என்று பதிவிட்டு தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் தன் வாழ்த்தை கூறியிருந்தார்.
மேலும் பல நடிகர்களும் பிரபலங்களும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.