Nayanthara Rakhi: ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...நயன்தாராவுக்கு ராக்கி கட்டியவர் யார் தெரியுமா?
நடிகை நயன்தாராவுக்கு ஒருவர் ராக்கி கட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. யார் அது என பலரும் தேடிய நிலையில் அவர் வேறு யாருமல்ல...
![Nayanthara Rakhi: ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...நயன்தாராவுக்கு ராக்கி கட்டியவர் யார் தெரியுமா? Actress Nayanthara ties Raaki to her Dermatologist Dr Renita Rajan on Raksha Bandhan- Watch Nayanthara Rakhi: ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...நயன்தாராவுக்கு ராக்கி கட்டியவர் யார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/11/d7c73720797520efa2181858d472dc881660221642260224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரக்ஷாபந்தனை முன்னிட்டு நடிகை நயன்தாராவுக்கு மருத்துவர் ஒருவர் ராக்கி கட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் திருமண புகைப்படங்களை அவ்வப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனிடையே திருமண நிகழ்வை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சகோதரர்களாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை ராக்கி கட்டி வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில் நடிகை நயன்தாராவுக்கு ஒருவர் ராக்கி கட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. யார் அது என பலரும் தேடிய நிலையில் அவர் வேறு யாருமல்ல...பிரபல சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் தான். கடந்த ஆண்டு இறுதியில் நயன்தாரா அழகு சாதனப் பொருளான லிப் பாம் தயாரிப்பில் களமிறங்கினார். இதற்கு தி லிப் பாம் கம்பெனி என பெயரிட்டிருந்தார். இதில் பார்ட்னராக சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் உள்ளார்.
ரெனிட்டா ராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவரின் நட்பையும் , சகோதரத்துவத்தையும், பலத்தையும், பரஸ்பர மரியாதையையும் கொண்டாடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)