Meera Jasmine Update:: மீரா ஜாஸ்மினுக்கு இப்படி ஒரு அண்ணனா?.. பர்த்டே விஷ்ஷோடு போட்டோவை வெளியிட்ட மீரா..!
பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் தனது மாற்றுத்திறனாளி சகோதரரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் தனது மாற்றுத்திறனாளி சகோதரரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “ நேற்று என்னுடைய அதிஷ்டமான பெரிய அண்ணனுக்கு பிறந்தநாள். எப்போதும் உங்களுடைய உடல்நலம், அமைதி மற்றும் வளர்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். லவ் யூ ஜோ மோன் குட்டா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
2000 - ளில் பிரபல நடிகையாக வலம் வந்த, நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். வெள்ளை புடவையில் மீரா ஜாஸ்மின் முதல் போட்டோவை தட்டிவிட, அதனை பார்த்தவர்கள்.. பாரேன்.. இவங்க இன்னும் அப்படியே இருக்காங்க என ஹார்டின்களை பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர். தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயார்கள் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார் மீரா ஜாஸ்மின். அதனைத்தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திலும், ஷியாமுடன் பாலா படத்திலும் நடித்தார். தமிழ் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்த அவர் கடந்த 2004 ஆம் ஆண்டும் ‘அம்மயீ பகுன்டி’ படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
அதே வருடத்திலேயே மணி ரத்னத்தின் ‘ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த அவர் 2005 இல் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி படத்தில் இணைந்தார். இந்தப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது.
அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்த மீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜானை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரைத்துறையில் இருந்து விலகினார். 2016 இல் மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனைகள் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாக அமைந்தது. 2018 இல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக காட்சி ஒன்றில் நடித்திருப்பார்.
மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட மீரா பின்னர் பெரிய நடிகையாகி மாறி, பாடம் ஒன்ணு படத்திற்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.