மேலும் அறிய

Vettaiyan: வேட்டையன் படத்தில் என்ன கதாபாத்திரம்? நடிகை மஞ்சுவாரியர் பரபரப்பு பேட்டி

வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் என்னவென்று பிரபல நடிகை மஞ்சுவாரியர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் படம் மூலமாக தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் என்று புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

வேட்டையன் படத்தில் என்ன கதாபாத்திரம்?

ரஜினிகாந்த் படம் என்றாலே பொதுவாக எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கும். ஜெய்பீம் இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சுவாரியர் வேட்டையன் படம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் வேட்டையன் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேட்கப்டட்டது. அதற்கு அவர், “வேட்டையன் படத்தில் எனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரஜினிகாந்துடன் மனைவியாக நடிக்கிறேன். அது முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் படம். அதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ள படம் என்பது ஆகும். ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஸ்டாரை ஞானவேல் போன்ற இயக்குனர் இயக்கும்போது தரமான கதையாக அமையும். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மிகுந்த எதிர்பார்ப்பு:

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன்பின்பு, அஜித்குமாருடன் இணைந்து துணிவு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். வேட்டையன் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மஞ்சுவாரியருக்கு தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவரும் நல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத்திலும் அவருக்கு இளம் கதாநாயகிகளுக்கு சவால் விடுக்கும் அளவிற்கு படங்கள் குவிந்து வருகிறது. விடுதலை 2ம் பாகத்திலும் மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது நடிப்பில் எம்புரான் என்ற படமும் படப்பிடிப்பில் உள்ளது. வேட்டையன் படத்தில் அசுரன் படம் போலவே மஞ்சுவாரியருக்கு கனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Wayanad : ரூ.25 லட்சம் வழங்கிய ஃபகத் ஃபாசில்...மம்மூட்டி ரூ.20 லட்சம்.. வயநாட்டை அணைக்கும் பிரபலங்கள்..

மேலும் படிக்க: BOAT Movie Review: சிம்புதேவனின் போட் கரை சேர்ந்ததா? கடலில் மூழ்கியதா? முழு திரை விமர்சனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Embed widget