ஏர் இந்தியா விமான விபத்து.. இதுதான் உங்க மனிதநேயமா.. மஞ்சிமா மோகன் காட்டம்!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நடிகை மஞ்சிமா மோகன் சிலரை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் மஞ்சிமா மோகன். அதைத்தொடர்ந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தமிழில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். சமீபத்தில் சுழல் 2 வெப் தொடரில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றன.
காதல் திருமணம்
தேவராட்டம் படத்தில் நடித்த போதே கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் காதலிக்க தொடங்கினர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கிய மஞ்சிமா மோகன் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்து சம்பவம் குறித்து மஞ்சிமா மோகன் மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விமான விபத்தையும் இறந்தவர்களையும் சோதனைக்குள்ளாகும் விசயங்களை பலர் செய்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மஞ்சிமா மோகன் கருத்து
கடந்த 12ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றபோது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து பலரும் பலிவதமான கருத்துக்களையும் பல விபத்து நிகழ்வோடு ஒப்பிட்டு பேசி வருவதை நாம் காண்கிறோம். இந்நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் இதுதாெடர்பாக கூறியிருப்பதாவது, மனித நேயம் எங்கே போனது. இதயத்தை உலுக்கும் வகையில் நடந்துள்ள விபத்தில் பலரும் தங்களது வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். ஆனால், சிலர் இதை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.
அடுத்த தலைமுறைக்கும் இதுதானா
இந்த விபத்து சம்பவத்தை பயன்படுத்தி சென்ஷேனல் ஆக்கி ஜாதகம் கணிப்பதில் இருந்து நியூமரலாஜி வரைக்கும் தகவல்களை பரப்புவதுடன் மட்டமான ஜோக்குகளை உருவாக்கி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதை விட்டுவிட்டு அவர்களது முகத்தில் மைக்கை நீட்டி அநாகரிகமாக நடந்துகொள்வதும் அவர்களை பேச சொல்லி வற்புறுத்துவதும் எந்தமாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. இரக்கமும் மரியாதையும் காட்ட வேண்டிய இந்த நேரத்தில் அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் நாம் உதாரணமாக காட்ட விரும்புகிறோமா என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மஞ்சிமா மோகனின் இந்த கருத்துக்கு பலரும் உடன்படுவதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.





















