என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு...ஜன நாயகன் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் பகிர்ந்த மமிதா பைஜூ
Mamitha Baiju : ஜன நாயகன் படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த அனுபவத்தை மலையாள நடிகை மமிதா பைஜூ பகிர்ந்துகொண்டுள்ளார்

ஜன நாயகன்
நடிகர் விஜயின் திரைவாழ்க்கையில் கடைசி படமாக ஜன நாயகன் படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பிரியாமனி , கெளதம் மேனன் , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. கடந்த மே மாதம் ஜன நாயகன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நிறைவடைந்தது.
விஜயுடன் நடித்த அனுபவம் பற்றி மமிதா பைஜூ
ஜன நாயகன் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளர். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரியளவில் பிரபலமானார் மமிதா பைஜூ. தற்போது விஜயின் தங்கை கதாபாத்திரத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். ஜன நாயகன் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் மமிதா பைஜூ பகிர்ந்துகொண்டுள்ளார். " விஜய் சார் ரொம்பவும் பஞ்சுவலான ஆள். ரொம்ப கூலாக இருப்பார். ஜன நாயகன் பட செட்டில் என்ன நடந்தாலும் அவர் அதை கூலாக ஹேண்டில் செய்வார். அதே நேரத்தில் அவர் நாம் பேசுவதை கவனமாக கேட்பார். நான் அவரிடம் என்னவெல்லாமோ உளறுவேன். எல்லாத்தையும் 'ஹ்ம்ம்' சொல்லிக் கொண்டே கேட்பார்.
"#Vijay sir is punctual and very cool. Whatever happens in #JanaNayagan set, he handles it very cool♥️. Also he is a very good listener🤝. I used to blabber many things to him😁. He used to say 'Hmm' 'Haa' etc...😂"
— AmuthaBharathi (@CinemaWithAB) June 19, 2025
- #MamithaBaijupic.twitter.com/6fVgmov1sF
விஜய் பிறந்தநாள்
வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் 51 ஆவது பிறந்தநாள் வரவிருக்கிறது. இதனை முன்னிட்டு விஜயின் சூப்பர்ஹிட் படங்கள் பல திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கின்றன. மேலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன.





















