தொப்புள் மேல் அப்படி என்ன மோகம்....தென் இந்திய சினிமாத் துறையை பொளந்து கட்டிய மாளவிகா மோகனன்
பல ஆண் நடிகர்கள் வெளியில் பெண்ணியவாதி வேஷம் போட்டு திரிவிதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மாளவிகா மோகனன்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார். கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் இவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. தற்போது கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென் இந்திய சினிமாத்துறை குறித்து பேசியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொப்புள் மோகத்தில் தென் இந்தியர்கள்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாளவிகா மோகனன் ' தென் இந்தியாவில் தொப்புளை ஆபாச நோக்கில் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. நான் மும்பையில் வளர்ந்தவள். அங்கு இதெல்லாம் ரொம்ப நார்மல். ஆனால் தென் இந்திய சினிமாவில் தொப்புள் மோகம் அதிகம் இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் நடிகைகளின் உடல் அங்கன்களை ஜூம் செய்து ஆபாச நோக்கில் புகைப்படங்கள் பரப்பப் படுகின்றன. " என பேசியிருந்தார்
பெண்ணியவாதி வேஷம் போடும் நடிகர்கள்
அதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில் ' கடந்த ஐந்து ஆண்டுகளில் நடிகர்களிடம் நான் ஒன்றை கவனித்து வருகிறேன். தங்களை எப்படி ஒரு முற்போக்கான ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் எனறு அவர்களுக்கு தெரியும். என்ன பேசினால் தன்னை ஒரு பெண்ணியவாதியாக காட்டிக்கொள்ள முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். அப்படி பெண்களை சமமாக நடத்துபவர்களாக தெரியும் பலர் பெண் வெறுப்புள்ளவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவர்களால் இப்படி எப்படி செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.' என மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.
I'm loving @MalavikaM_'s interviews these days. Earlier, she called out the weird 'navel obsession' in film industry, and now she speaks about male actors who preach equality in their films and interviews, but don't practice it in real life. 👍 #MalavikaMohanan pic.twitter.com/7Ko1FBXAIM
— George 🍿🎥 (@georgeviews) April 24, 2025





















