எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
காஷ்மீரில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பின்போது பெண்களை கடத்த கும்பல் வந்த பகீர் தகவலை லட்சுமி பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வந்தவர் எம்.ஜி.ஆர். கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருந்த இவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, சரோஜா தேவி, லதா போன்ற புகழ்பெற்ற பலரும் நடித்துள்ளனர்.
கடத்த வந்த கும்பல்:
எம்.ஜி.ஆருடன் நடித்த லட்சுமி அவர் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லட்சுமி, சின்னவர் பத்தி என்ன சொல்றது. நாம எல்லாம் சின்னவர்னு கூட கூப்பிட்டது இல்ல. பர்ஸ்ட் டைம் மீட் பண்றேன் மாட்டுக்கார வேலனுக்காக பேசுறாங்க. அவரு மாதிரி விருந்தோம்பல் காட்றவங்கள பாக்க முடியாது.
நாங்க இதய வீணை படம் காஷ்மீர்ல பண்ணிகிட்டு இருந்தோம். என்னமோ பைனாகுலர்ல பாத்துகிட்டே இருந்தாரு. நான் பக்கத்துல போயி என்ன சார் அங்கயே பாத்துகிட்டு இருக்கீங்கனு கேட்டேன்.உஷ்ஷ் அப்படின்னாரு. எல்லாரும் அங்க போயி உக்காருங்க. நட்ஸ் எல்லாம் வருது. சாப்பிட்டு அங்க உக்காருங்க அப்படினாரு. என்ன தோணுச்சுனு தெரியல. பேக் அப் பண்ணுங்க.. இந்த பொம்பளைப் புள்ளைங்க எல்லாம் அனுப்பிடுங்க அப்படின்னாரு.
களத்தில் இறங்கி சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.
எங்க இருந்து இவரு கண்டுபிடிச்சாரு.. என்னானு தெரியல.. அவரோட புத்திக்கூர்மை மொத்தமா வேற மாதிரி இருக்கும். இங்கதான் நின்னுகிட்டு இருக்காரு. யாரும் அவருகிட்ட வந்து பேசவும் இல்ல.. ஒரு கும்பல் வேன்ல வருது. பெண்கள் இருக்காங்க.. கடத்தலாம்னு.
பிரச்சினை வரும்னு தெரிஞ்ச உடனே பேக்கப் பண்ணி எங்களை அனுப்பிட்டாரு. நாங்க வண்டில உக்காந்து இருக்குறப்ப திரும்பி பாக்குறோம். புலியூர் சரோஜா சாட்சி. அவங்க அந்த படத்துல இருக்காங்க.
ரியல் ஃபைட்:
நான் பாக்குறேன். நம்ம ஃபைட்டர்ஸ் சைட்ல இருந்து வந்தாங்க.. எல்லாரும் அடி.. கூட இவரும் இறங்கி சண்டை போட்றாரு. உண்மையான ஃபைட் பண்ற ஹீரோவை அன்னைக்கு நான் பாத்தேன். அது எம்.ஜி.ஆர். அத்தனை பேரையும் அடிச்சுருக்காருங்க. அடிச்சு தூக்கிப் போட்ருக்காரு. அப்புறம் கூப்பிட்டு ஷுட் பண்ணாங்க.
இவ்வாறு லட்சுமி பேசினார்.
எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகை லட்சுமி மாட்டுக்கார வேலன், சங்கே முழங்கு, இதய வீணை, என் அண்ணன், குமரி கோட்டம், தாய்க்கு தலைமகன் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடிப்பதற்காக வாள் பயிற்சி, சிலம்பம், கத்திச்சண்டை போன்றவை கற்றுத் தேர்ந்தவர். மேலும், எம்.ஜி.ஆர். காலத்தில் நடித்த நம்பியார், சிவாஜி, முத்துராமன் போன்ற பல நடிகர்கள் தற்காப்பு கலைகளை கற்றுத்தேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

