பளபளக்கும் சருமம் வேண்டுமா?இந்த எண்ணெய் பயன்படுத்துங்க!
விதையுடன் கூடிய திராட்சைப் பழங்களைப் பதப் ஓயின்' தயாரிக்கும்போது கிடைக்கும் இணை தயாரிப்பே 'திராட்சை விதை எண்ணெய்' எனப்படுகிறது.
இது இயற்கையான அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ ஆகியவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் முகப்பருக்களை நீக்குகிறது. சருமத் துளைகளில் ஆழமாக ஊடுருவி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.
திராட்சை விதை எண்ணெய் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும், மென்மையையும் அதிகரிக்கிறது. சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது.
உங்களுக்குப் பிடித்த மாய்ஸ் சுரைசிங் கிரீம் மற்றும் பாடி கிரீம் களில் ஒரு துளி திராட்சை விதை எண்ணெய்யை கலந்து உபயோகித்தால் சருமம் நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள ஆன்டி- ஆக்சிடன்டுகள், சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
திராட்சை விதை எண்ணெய்யை சிறிது எடுத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
கற்றாழை ஜெல், ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய் அல்லது ரோஜா பன்னீர் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றுடன், திராட்சை விதை எண்ணெய்யைக் கலந்து சருமத்துக்கு பயன்படுத்தலாம்