தனுஷை புகழ்ந்து தள்ளிய க்ரிதி சனோன்
தேரே இஷ்க் மே படத்தில் தனுஷூடன் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை க்ரித்தி சனோன் பகிர்ந்துகொண்டுள்ளார். தனுஷின் நடிப்பை அவர் பாராட்டியிருக்கும் விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் க்ரித்தி சனோன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேரே இஷ்க் மே படத்தில் தனுஷூடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்ட நடிகை கரித்தி சனோன் தனுஷின் நடிப்பை பாராட்டி கூறியுள்ளார்.
தேரே இஷ்க் மே
2011 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'ராஞ்சனா' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் தனுஷ். முதல் படமே இந்தியில் அவருக்கு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமையவே அடுத்தடுத்து இந்த கூட்டணி தொடர்ந்தது. 2021 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் அத்ரங்கி ரே திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது மூன்றாவது முறையாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் தேரே இஷ்க் மே. முழுக்க முழுக்க ரொமாண்டி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தனுஷை புகழ்ந்த க்ரித்தி சனோன்
தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். நான் எப்போதும் அவரது திறமையை ரசிப்பவளாக இருந்திருக்கிறேன். தனது கலையில் மேல் அவருக்கு ஒரு உறுதியான பிடிப்பு இருப்பதாக நான் பார்க்கிறேன். அவர் தனது கதாபாத்திரங்களில் பல அடுக்குகளை வெளிப்படுத்துகிறார். தனுஷூடன் நடிப்பதற்கு நாம் மிகவும் ஆர்வவாக இருந்தேன் ஏனால் எனக்கு நடிப்பில் தீனிப் போடக்கூடிய ஒரு நடிகர் தனுஷ் என எனக்கு தெரியும்
படத்தில், ஷங்கரும் முக்தியும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை, நாங்கள் இருவரும் சந்தித்ததில்லை, அதனால் அது சரியாக அமைந்தது. எங்களுக்குள் சில மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன, இந்த காட்சிகளில் நாங்கள் இருவரும் ஊக்கத்துடன் நடித்தோம். அவர் ஒரு நடிகராக நம்பமுடியாத அளவிற்கு ஒத்துழைப்பவராகவும் உதவிகரமாகவும் இருக்கிறார்.
நாங்கள் ஒன்றாக சில மேஜிக்கல் தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன். சில காட்சிகளில் நடித்தபின் நாங்கள் அதை உணர்ந்தோம். பெரும்பாலும், நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, 'அது ஒரு நல்ல காட்சி' என்று நினைப்போம். அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, எதிர்காலத்தில் நாங்கள் ஒன்றாக இன்னும் நிறைய பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்.





















