மேலும் அறிய

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளலாம் பெற்றோருடன் வாழ்ந்துவரும் கௌசல்யாவின் மனம் திறந்த பதில்

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கௌசல்யா விஜய், முரளி, பிரபுதேவா, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். நடிகர் விஜய் ஜோடியாக நேருக்கு நேர், ப்ரியமுடன் படத்தில் நடித்தது கௌசல்யாவிற்கு நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. 

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

தனிமையில் கௌசல்யா :

சினிமாவில் இருந்து விலகிய பிறகு சின்னத்திரையில் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் எங்கே இருக்கிறார்? வெளிநாடு செட்டிலாகி விட்டாரா? திருமணம் ஆகிவிட்டதா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன. 43 வயதாகும் கௌசல்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கௌசல்யா சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவரின் சுதந்திரமான வாழ்க்கையை பற்றி பேசியிருந்தார்.

பிரேக்-அப் என்ன காரணம் ?

சினிமாவில் ஜெயிக்க வேண்டும், திருமணமாகிவிட்டால் மார்க்கெட் போய்விடும் என்ற காரணத்தால் தனது காதலருடன் பிரேக் அப் செய்துள்ளார். கௌசல்யாவை விடவும் ஐந்து ஆறு வயது கூடுதலாக இருந்ததால் அவருக்கும் வயது கூடிக்கொண்டே போகிறது என திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். திருமணம் என்றால் குறைந்தது 20 வருட காண்ட்ராக்ட். வாழ்க்கையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் சமாளிக்கும் தைரியம், மெச்சூரிட்டி அந்த சமயத்தில் இல்லை, மேலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது அத்தனை எளிதான ஒரு விஷயம் அல்ல என நினைத்ததால், நான் என்னுடைய காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டேன்.

கல்யாணத்துக்கு நான் ஏற்றவள் அல்ல என நானே முடிவு செய்து கொண்டேன். பிரேக் அப் செய்தாலும் இன்றும் என்னுடைய எக்ஸ் உடன் நட்பு ரீதியில் பேசிக்கொள்வது உண்டு. அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்து இருந்தார் கௌசல்யா.  

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

அவரின் சொந்தத்திலேயே நிறைய பேர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என சொல்லியும் பிரேக் அப்புக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் கௌசல்யா. 

கௌசல்யாவின் ஹோம் டூர் :
 
அமெரிக்காவில் இருக்கிறார், சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கௌசல்யா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அவரின் அழகான இல்லத்தில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார் என கூறியுள்ளார். வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ள அவரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 

ஃபிட்னஸ் மீது கவனம் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நலக்குறைவால் உடல் எடை கூடியாதல் டயட், உடற்பயிற்சி, யோகா என முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சமீப காலமாக மீண்டும் பேக் டு பார்ம் வந்துள்ள கௌசல்யா அடுத்தடுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த கௌசல்யா, மக்களுக்கு அவர் குறித்து இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.  

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்திருந்தார்.  

தலைப்பு செய்திகள்

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget