மேலும் அறிய

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!

எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவ்வளவு எளிதில் யாரும் தங்க முடியாது. நான் இந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதைத்தவிர எனக்கு பெரிய தொகை ஒன்றை ராஜ்மோகன் எனக்கு வழங்கினார் என பாவா லட்சுமணன் கூறியுள்ளார்.

விவேக், மயில்சாமி, மனோபாலா இவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு இந்த நிலை வந்திருக்காது என நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜராக பணியாற்றிய லட்சுமணன் ஆனந்தம் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 60 வயதாகும் அவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேசமயம் வீடில்லாமல் நண்பரின் ஹெஸ்ட் ஹவுஸில் சோபாவில் வசித்து வந்த அவரின் நிலை பலரையும் கண் கலங்க வைத்தது. 

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன், “தங்குவதற்கு வீடில்லாமல் இருந்த எனக்கு அமைச்சர் ராஜ்மோகன் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவருடைய வீட்டை கொடுத்துள்ளார். 2 பெட்ரூம், ஏசி வசதி கொண்ட வீடு நன்றாக உள்ளது. நான் கிட்டதட்ட ஒரு மாதமாக வீடில்லாமல் இருந்தேன். வருமானம் இல்லை என்பதால் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவ்வளவு எளிதில் யாரும் தங்க முடியாது. நான் இந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதைத்தவிர எனக்கு பெரிய தொகை ஒன்றை ராஜ்மோகன் எனக்கு வழங்கினார். 

நான் வீடில்லாமல் தரையில் படுத்து கிடந்ததைப் பார்த்து அவர் கண் கலங்கி விட்டார். என்னுடைய நண்பர் தான் 2 மாதமாக அவருடைய ஹெஸ்ட் ஹவுசில் தங்க வைத்து சாப்பாடு போட்டார். போன் ரீசார்ஜ் செய்யக்கூட என்னிடம் பணம் கிடையாது. இயக்குநர் விக்ரமன் ரூ.50 ஆயிரம் கொடுத்து கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என சொன்னார். அதேபோல் ரஜினிகாந்த் ரூ.1 லட்சம் கொடுத்தார். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் மாதம் மாதம் ரூ.10 ஆயிரம் என் வங்கி கணக்கில் ரஜினிகாந்த் போட சொல்லி கூறியுள்ளார். 

நான் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வீடு கொடுத்ததை அவருடைய உதவியாளரை அழைத்துச் சொன்னேன். ரொம்ப சந்தோசம் என சொல்லி மாதம் மாதம் பணம் தருகிறோம். பைக்கில் எல்லாம் போக வேண்டாம். எங்கு சென்றாலும் ஆட்டோவில் போங்கள். ரஜினிகாந்த் என்ன உதவி என்றாலும் செய்ய சொல்லி கூறியிருப்பதாக அவர் உதவியாளர் என்னிடம் தெரிவித்தார். மனிதன் ஒரு கஷ்டத்தை அனுபவிக்கும்போது தான் கடவுள் நம்மை நல்லா வைத்துக்கொள்ள விரும்புவார். ராஜ்மோகன் என்னை சந்தித்து நான் உங்கள் ரசிகன், உங்கள் காமெடி எல்லாம் பார்த்து ரசித்துள்ளேன் என சொன்னார். எனக்கு சொந்த ஊர் மதுரை. நாங்கள் வசித்து வந்த தெருவே எங்கள் தாத்தா பெயரில் தான் இருந்தது. எல்லாவற்றையும் விற்று விட்டார். 

Also Read: Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!

எங்கள் வீட்டில் மொத்தம் 8 பேர். என் அண்ணன், தம்பி எல்லாரும் கஷ்டப்படுறாங்க. நான் தான் அவர்களுக்கு உதவி செய்தேன். எனக்கு சினிமா அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்தே குடிப்பழக்கம் இருந்தது. எனக்கு பழக்கத்தை உருவாக்கியவர்கள் நிறுத்தி விட்டார்கள். என்னால் முடியவில்லை. முன்பெல்லாம் ஒரு ஃபுல் குடித்து வந்தேன். இப்போது அந்த வாடை பார்த்தால் குமட்டல் தான் வருகிறது.  எனக்கு முதலில் கேபிஒய் பாலா தான் வந்து உதவி செய்தார். அந்த பணத்தை வைத்து தான் 2 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தேன். நான் வடிவேலுவிடம் இதுவரை உதவி கேட்கவில்லை. கேட்டால் கண்டிப்பாக செய்வார். விவேக், மயில்சாமி, மனோபாலா இவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு இந்த நிலை வந்திருக்காது. அடுத்ததாக 2,3 படம் வாய்ப்புகள் வந்துள்ளது. 

எனக்கு கமல்ஹாசன் கூட படம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. இதுவரை முடியவில்லை. சினிமாக்காரனுக்கு பெண் தர மாட்டேன் என சொல்லியதால் நான் இதுவரை கல்யாணம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget