TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.எ சரவணன் தன்னை திமுகவில் இணைய அழைத்து பேரம் பேசியதாக புகார் தெரிவித்த நிலையில் இது தொடர்பான ஆடியோ ஆதரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , தன்னைத் தொடர்புகொண்ட சிலர் தி.மு.க-வில் இணைவதற்காக ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
"எளிய பின்னணியில் இருந்து வந்து நான் மக்களின் ஆதரவோடு எம்.எல்.ஏ ஆகியுள்ளேன். ஆனால், பண பலம் படைத்த சிலர் என்னை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைவதற்காக இந்த அளவுக்குப் பணம் தர முன்வந்தார்கள் மேலும் தனக்கு 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக" அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா தனக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது 2-வது த.வெ.க எம்.எல்.ஏ-வான சரவணன் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு தி.மு.க-வைச் சாடியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















