மேலும் அறிய

வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!

இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசு தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை எந்தவித மேல்முறையீடு செய்யாமல் விட்டதால் தான் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் செயல்படும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி , தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம்,  சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 தனியார் மருத்துவ கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டிலேயே  சுமார் 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க நினைக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணம் கேள்விக்குறியாகி உள்ளது. இதன்பின்னணியில் முந்தைய திமுக அரசு அலட்சியமாக செயல்பட்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். 

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த 4  மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மருத்துவ சேவை தரமானதாக உள்ளது. இவ்வாறு தனியார் மருத்துவக்கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதால் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. கிராமப்புற மக்களுக்கு பெரிதும் உதவக்கூடிய 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடும் கிடைக்காது. 

அதுமட்டுமல்லாமல் அரசு நிர்ணயிக்கக்கூடிய கட்டணத்தை பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. கடந்த 2 நாட்கள் முன்பு தான் இந்த விஷயம் தெரிய வந்தது. 4  மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு அரசை அணுகாமலேயே இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் தவெக அரசு இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்து பெற்றதை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எப்படி மருத்துவக்கல்லூரி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கொடுக்கப்படுகிறதோ, அதேபோல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றவும் தமிழ்நாடு அரசின் தடையில்லா சான்றிதழ் தேவை என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசு தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை எந்தவித மேல்முறையீடு செய்யாமல் விட்டதால் தான் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது. 

Also Read: TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?

கல்வியும், மருத்துவமும் மாநில பட்டியலுக்கு வருவது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 4 கல்லூரிகளும் எந்த கட்சியைச் சேர்ந்தவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். சமூக நீதியைப் பேசும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

எப்படி தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றப்படலாம்.  இதற்கு திமுக, அதிமுக கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget