மேலும் அறிய

நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

பள்ளி மாணவியை அவமானப்படுத்தியதற்கு அமைச்சர் கீர்த்தனா விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தவெக எம்.எல்.ஏ ரேவந்த் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏவும், சென்னை ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளருமான ரேவந்த் சரனைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை எச்சை இலை மற்றும் குப்பைகளை அகற்ற பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ரேவந்த் சரண், திமுக வேட்பாளர் க. கணபதியை 61,509 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இது மாநில அளவில் கவனம் பெற்ற வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளராகவும், விஜயின் தீவிர ரசிகராகவும் அறியப்படும் ரேவந்த், தவெகவின் இளம் வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்கப்பட்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, மதுரவாயல் பகுதியில் நிலவும் சாலை, மழைநீர் வடிகால், போக்குவரத்து நெரிசல், தூய்மை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும், மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். தொகுதியில் பலமுறை நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

துப்புறவு பணியாளர்களை எச்சில் இலை எடுக்க சொன்ன ரேவந்த்

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரேவந்த் சரண், வி.எஸ். பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விழாவையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவு நிகழ்ச்சி அருகிலிருந்த சென்னை குடிநீர் வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. உணவு முடிந்த பிறகு அங்கிருந்த எச்சை இலைகள் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சியின் 11-வது மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நேரத்தில் அவர்கள் தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருந்தபோதிலும், எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்து பள்ளி மாணவியிடம் நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதே நேரத்தில் தற்போது எம்.எல்.ஏ ரேவந்த் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தவெகவில் இளம் தலைமுறையினருக்கு பதவிகள் வழங்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. ஆனால் தவெக அதிகாரிகள் சாமானிய மக்களின் கண்ணியத்தைப் பற்றி எந்த வித புரிதலும் இல்லாதவர்களாக நிரூபனமாகி வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget