மேலும் அறிய

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!

புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த போது ஒரு காட்சியில் நடிகர் பாலா சிங் தன்னை நிஜமாகவே மிதித்துவிட்டதாக நடிகை சினேகா பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குடும்பக் கதாபாத்திரங்கள் முதல் வலுவான நடிப்புத் திறன் கொண்ட வேடங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சினேகா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத வலிமிகுந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை' திரைப்படத்தில் நடித்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்தே சினேகா பேசியுள்ளார். அந்தப் படத்தில் நடிகர் பாலா சிங், அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு காட்சியில் பாலா சிங், சினேகாவின் வயிற்றில் எட்டி உதைக்க வேண்டியிருந்தது.

கட்டுப்பாட்டை இழந்த பாலா சிங்

அந்தக் காட்சியை நினைவுகூர்ந்த சினேகா, "அது வெறும் நடிப்பு இல்லை. உண்மையாகவே அவர் என் வயிற்றில் உதைத்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காட்சி மிகவும் இயல்பாகவும், தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் மீண்டும் மீண்டும் கூறியதால், பாலா சிங் காட்சியில் முழுமையாக ஒன்றிப்போய் உதைக்கும் வலிமையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாக அவர் விளக்கினார்.

"காட்சி உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலேயே என்னை மிதித்துவிட்டார். ஷாட் முடிந்தவுடன் நான் நேராக கேரவனுக்குச் சென்றேன். 'நான் கேரவனுக்குப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றதும், வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்," என்று சினேகா கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாரோ ஒருவர் இயக்குநர் செல்வராகவனிடம் தெரிவித்ததாகவும், உடனடியாக அவர் வந்து தனது உடல்நிலையை விசாரித்ததாகவும் சினேகா தெரிவித்துள்ளார். "அவர் என்னிடம், 'உண்மையாகவே உதைத்துவிட்டாரா? ரொம்ப வலிக்கிறதா? மன்னித்துவிடுங்கள். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள்' என்று கூறினார். அந்த அக்கறையை நான் மறக்க முடியாது," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த நேரத்தில் தாங்க முடியாத வலியை அனுபவித்திருந்தாலும், படம் வெளியான பிறகு திரையரங்கில் அந்தக் காட்சியைப் பார்த்தபோது வேறு மாதிரியான உணர்வு ஏற்பட்டதாகவும் சினேகா கூறினார்.

"அந்தக் காட்சி திரையில் மிகவும் சக்திவாய்ந்ததாக வந்திருந்தது. அப்போது நான் அனுபவித்த வலியும், சிந்திய கண்ணீரும் வீணாகவில்லை என்று தோன்றியது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சினேகா பகிர்ந்தபின் இயக்குநர் செல்வராகவன் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஒருவேளை சினாகவிற்கு உள்காயம் ஏற்பட்டிருந்து அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம் . நடிகர்களை இவ்வளவு கொடுமை செய்துதான் நடிப்பை வாங்கமுடியும் என்கிற எண்ணத்தை இயக்குநர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget