மேலும் அறிய

மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!

700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோவதாகவும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘’தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் ஓரளவு சமாளிக்கக் கூடிய கட்டணத்தில் மருத்துவப் படிப்பை படிக்கும் நல்வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,900 இடங்கள், 5 தனியார் பல்கலைக்கழகங்களில் 850 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 3050 இடங்கள், ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் 150 இடங்கள் என மொத்தம் 13,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக 4,247 இடங்களும், மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 97 இடங்களும் என 4344 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்படும்.

நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு

இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள 4750 எம்.பி.பி.எஸ் இடங்களில் 50% முதல் 65% இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவை இப்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறி விட்டதால், அவற்றில் உள்ள 650 இடங்களில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு வந்த 350 இடங்கள் இப்போது பறிபோகின்றன.

இவை தவிர மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படவிருப்பதால் கூடுதலாக 350 இடங்களை மாநில அரசு ஒதுக்கீடு இழக்கும். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 700 மாணவர்கள் மருத்துவப் படிப்பில்  சேருவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

மாறும் மாணவர் சேர்க்கை அதிகாரம்

தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறிய பிறகும் கூட, அவை தமிழ்நாட்டில்தான்  செயல்படும் என்றாலும், அவற்றுக்கான மாணவர் சேர்க்கை அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விடும். அதுமட்டுமின்றி, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு  ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40  லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட இக்கல்லூரிகளில்  சேர்ந்து மருத்துவம் படிக்க முடியும்.

ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டால், அவற்றில் மருத்துவப் படிப்பில் சேர ரூ.23 லட்சம் முதம் ரூ.30 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் இந்த நிறுவனங்களில் சேர முடியாது.

தடையின்மை சான்று இல்லாமலேயே…

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டிருப்பதே சட்ட விரோதம் ஆகும். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அந்தக் கல்லூரி இணைவு பெற்றிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தடையின்மை சான்று கட்டாயம் ஆகும். ஆனால், தடையின்மை சான்று இல்லாமலேயே  தனியார் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனியார் கல்லூரிகளில் இருந்த 700 அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை இடங்கள் மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவது இயல்பானதுதான் என்பதால்,  அதனால் ஏற்படும் மாணவர் சேர்க்கை இடங்களை ஈடுகட்டும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத்  தொடங்குவது, ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்குவது  போன்றவை தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையிலிருந்து முந்தைய அரசு தவறிவிட்டது.

தமிழ்நாட்டில்  மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நிலைப்பாட்டை வென்றெடுக்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருகிறது. இதை முந்தைய திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது.

40 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியே தொடங்காத அரசு

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திமுக அரசு தொடங்கவில்லை. அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இடங்களும் அதிகரிக்கப்படவில்லை. இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியே தொடங்காத அரசு என்ற அவப்பெயரை திமுக அரசு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் தேசிய மருத்துவ ஆணையம் விலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாபட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
இலவச லேப்டாப், சைக்கிள், மாசம் ₹1750 உதவித்தொகை.. ஐடிஐ-யில் அதிரடி அறிவிப்பு!
இனி காசு கொடுத்து படிக்க வேண்டாம்! இலவச லேப்டாப், சைக்கிள், மாசம் ₹1750 உதவித்தொகை.. ஐடிஐ-யில் அதிரடி அறிவிப்பு!
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget