மேலும் அறிய

Kani Kusruthi: கேரளா ஸ்டோரி இயக்குநர் படத்தில் நடிக்காத காரணம்: தலைமைச் செயலகம் சீரிஸ், கேன்ஸ் பட நடிகை விளக்கம்!

தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென்னின் அடுத்த படத்தில் நடிக்க மறுத்த காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை கனி குஸ்ருதி.

கனி குஸ்ருதி

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பிரியாணி படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கனி குஸ்ருதி. இஸ்லாமிய சமூகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் அவர் நிர்வாணக் காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கான் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' படத்திற்கு கிராண்ட் பிக்ஸ் விருது கிடைத்தது. இந்தப் படத்தில் கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா ஆகிய இருவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் .

வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் ஜிஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியான தலைமைச் செயலகம் தொடரில் கனி குஸ்ருதி நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கான் திரைப்பட விழாவை முடித்து தற்போது கேரளா திரும்பியுள்ள கனி குஸ்ருதி பல்வேறு நேர்காணல்களை அளித்து வருகிறார். இந்த நேர்காணலில் அவர் பிரியாணி படத்தில் நடித்தது உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.

நிதி நெருக்கடியால் தான் அந்த படத்தில் நடித்தேன்

”பிரியாணி படத்தில் அழகியலோ அரசியலோ என்னுடைய அரசியல் நிலைப்பாட்டுடன் சுத்தமாக ஒத்துப்போகவில்லை என்று இயக்குநர் சஜினிடம் சொன்னேன். இப்படத்தின் இயக்குநர் மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியச் சமூகத்தில் இருந்து வருபவர். அது அவருடைய கருத்து. ஆனால் படத்தின் கருத்தோடு என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை பொதுவாக என்னுடைய அரசியல் கருத்துடன் ஒத்துப் போகாத படங்களில் நான் நடிப்பது இல்லை. படத்தின் இயக்குநர் சஜின் மீது இருந்த மரியாதையும் நிதி நெருக்கடியும் தான் இந்தப் படத்தில் நான் நடித்ததற்கான காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அழைப்பை நிராகரித்த காரணம்

“தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் தனது அடுத்த படத்திற்கான ஆடிஷனுக்கு என்னை அழைத்திருந்தார். என்னுடைய அரசியல் கருத்துடன் ஒத்துப்போகாத படங்களில் நான் நடிப்பது இல்லை அதனால் மறுத்துவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சமீப காலத்தில் மலையாளப் படங்களில் ஏன் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “மிகச்சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட மலையாள சினிமாவில் ஏன் சுவாரஸ்யமான பெண் கதாபாத்திரங்கள் எழுதப்படவில்லை, மேலும் அப்படியான கதாபாத்திரங்கள் சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் ஏன் சேர்க்கப்படவில்லை  என்கிற கேள்வி  நியாயமானது தான்” என்று பதிலளித்துள்ளார். 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget