Kajal Aggarwal Workout Video: “கர்ப்ப காலத்தில் இந்த பயிற்சி என்னை வலிமையாக்குகிறது” - வொர்க் அவுட் வீடியோ வெளியிட்ட காஜல்!
கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால், வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "நான் மிகவும் ஆக்டிவான ஒரு ஆள்தான். என்னோட வாழ்கை முழுவதுமே நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், தாய்மை என்பது முற்றிலும் வித்தியாசமானது. கர்ப்ப காலத்தை பெண்கள் சிரமம் இல்லாமல் கடக்க, ஏரோபிக் மற்றும் உடலுக்கு வலுவூட்டக்கூடிய பயிற்சிகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.
View this post on Instagram
பைலேட்ஸ் மற்றும் பாரே முறையில் நான் மேற்கொண்ட பயிற்சிகள், முன்னரை விடவும், கர்ப்ப காலத்திலும் என்னை வலிமையுள்ளவளாக இருக்க உதவுகிறது. இந்த பயிற்சிகளால் நான் வலிமையுள்ளவளாக, மெலிந்தது போல உணர்கிறேன்.
ஏரோபிக்ஸின் குறிக்கோள் கர்ப்ப காலத்தில் நமது ஃபிட்னஸை உச்சபட்ச நிலைக்கு எடுத்தச் செல்லாமல், நல்ல நிலையில் வைத்திருப்பது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது கணவர் கெளதம் கிச்சலுவுடன் வசித்து வருகிறார். அண்மையில் இவர், அவரது தங்கை மகனான இஷான் வலேச்சாவுடன் இணைந்து, ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தார். கர்ப்பமாக இருந்ததால் அந்த விளம்பரத்தில் உடல் எடை கூடி, முகம் எல்லாம் பெரியதாகி தோற்றமளித்தார் காஜல்.
View this post on Instagram
அந்த விளம்பரத்தை பார்த்த, ரசிகர்கள் காஜல் அகர்வாலை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். அதற்கு தனது இன்ஸ்டாவில் விளக்கமளித்த காஜல், “ நான் எதிர்கொண்டதைப் போலவே பாடி ஷேமிங் சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முட்டாள்கள் இதை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிக்கும். இன்னும் பல மாற்றங்களை சந்திக்கும்.
View this post on Instagram
ஹார்மோன் மாற்றங்களே காரணம். குழந்தை வளரும்போது வயிறு, மார்பகங்கள் பெரிதாகி உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். முகங்களில் பருக்கள் வரலாம். எப்போதும் சோர்வான தோற்றம் வரலாம்.பிரசவத்திற்குப் பிறகு முன்பு இருந்த அழகை திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் சிலருக்கு பழைய உருவத்தை திரும்பப் பெற முடியாமலும் போகலாம்.
இந்த மாற்றங்கள் இயற்கையானவை. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இதைப் பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருக்காதீர்கள். ஸ்ட்ரெஸாகும் போது மிதமான நீச்சல் அல்லது நடைபயிற்சி மனதைத் தெளிவுபடுத்தும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது குழந்தையுடன் இருக்கும் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

