Bigg Boss 15 | பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா பூமிகா?

பிரபல நடிகை பூமிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அவர் அதற்கு பதில் அளித்துள்ளார்.

நடிகை பூமிகா சாவ்லா..

பிரபல நடிகை பூமிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ளதாக எழுந்த செய்திக்கு பதில் அளித்துள்ளார். பூ வைத்தாய்.. பூ வைத்தாய்.. இந்த பூவைக்கோற் பூ வைத்தாய்.. இந்த பாடலையும், படத்தையும், அந்த படத்தில் வரும் பூமிகாவையும் தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாத என்றால் அது மிகையல்ல. 1978ம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தவர் தான் பூமிகா சாவ்லா. தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்த பூமிகாவிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். இதன் விளைவாக தனது 22வது வயதில் 'யுவக்குடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார். தமிழில் இவர் நடித்த முதல் படம் தளபதி விஜயின் பத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. பூமிகாவின் இரண்டாவது படமும் இதுதான்.   Bigg Boss 15 | பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா பூமிகா?

தமிழ் திரையுலக பயணம்..

காதல் சொல்வது உதடுகள் அல்ல.. கண்கள் தான் தலைவா.. என்று தனது முதல் தமிழ் படத்திலேயே பல ரசிகர்கள் நெஞ்சை கொள்ளையடித்த பூமிகா வெகு விரைவில் முன்னணி நாயகியாக மாறினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மாற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் பூமிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் இவர் தமிழில் வெகு சில படங்களே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரோஜா கூட்டம், சில்லனு ஒரு காதல் போன்ற படங்களில் இவர் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  Bigg Boss 15 | பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா பூமிகா?  

பிக் பாஸ் பயணம்..

இந்நிலையில் பிரபல நடிகை பூமிகா, ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகவே அதனை முற்றிலும் மறுத்துள்ளார் பூமிகா. அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் 'எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போது அழைப்பு வரவில்லை என்றும். ஆனால் ஏற்கனவே பிக் பாஸ் ' மற்றும் ஒன்று மட்டும் இரண்டாம் பாகங்களில் பங்கேற்க தனக்கு அழைப்பு வந்ததாகவும் கூறினார். ஆனால் அதை தான் மறுத்துவிட்டதாகவும் தன்னை சுற்றி 24 மணிநேரமும் கேமராக்கள் உள்ள இடத்தில் தன்னால் இருக்க முடியாது' என்றும் கூறியுள்ளார். ஆகவே இந்த சீசன் பிக் பாஸிற்கு அழைப்பு வரவில்லை, வந்தாலும் பங்கேற்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். 

Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை மணந்த பூமிகா இறுதியாக Ruler என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2019ம் ஆண்டு தோன்றினார். இந்த 2021ம் ஆண்டு கண்ணை நம்பாதே என்ற தமிழ் ஒரு தமிழ் படம் உள்பட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக இவர் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் கொலையுதிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Big Boss Bhumika Chawla Bhumika Chawla Big Boss

தொடர்புடைய செய்திகள்

Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

சூப்பரா தம்பி.. சூப்பர்.. இணையத்தை கலக்கும் லோ பட்ஜெட் ஜகமே தந்திரம்!

சூப்பரா தம்பி.. சூப்பர்.. இணையத்தை கலக்கும் லோ பட்ஜெட் ஜகமே தந்திரம்!

பாடல் எழுத வாய்ப்பளிக்கும் வசந்தபாலன் - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

பாடல் எழுத வாய்ப்பளிக்கும் வசந்தபாலன் - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : இந்தியாவில் தொற்று பாதிப்பு கொண்ட மாவட்டங்களில் கோயம்பத்தூர் முதலிடம்

Tamil Nadu Coronavirus LIVE News :  இந்தியாவில் தொற்று பாதிப்பு கொண்ட மாவட்டங்களில் கோயம்பத்தூர் முதலிடம்

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

90's கிட்ஸ்களை கிறங்கடித்த மோகினியின் டாப் 5 பாடல்கள்!

90's கிட்ஸ்களை கிறங்கடித்த மோகினியின் டாப் 5 பாடல்கள்!