Actress Ayesha: கடவுளே.. 2023-ஆம் ஆண்டு இப்படி இருந்தா நல்லாருக்கும்.. ஆயிஷாவின் ஆசை என்ன தெரியுமா?
நடிகை ஆயிஷா 2022-ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஆயிஷா 2022 ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கிய படம் ‘வனமகன்’. இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இதில் 2018-ஆம் ஆண்டு உருவான கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு ஜூலை 23 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயர் சூட்டப்பட்டதாக கடந்த மாதம் ஆர்யா தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி ஆர்யா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார்.
View this post on Instagram
அதில் குழந்தையின் ஆரியனாவின் முகத்தை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை, மகன் மற்றும் மனிதர்! நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதால் நாங்கள் மிகவும் பாக்கியசாலிகளாக உணர்கிறோம்! நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி எனவும் பிறந்தநாள் பதிவில் ஆர்யாவை புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு சாயிஷா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில்...இந்த ஆண்டு எனக்குக் கொடுத்த மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் நான் நன்றியுடன் மட்டுமே இருக்க முடியாது!
உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு உங்களுடைய நேரம்தான். நான் என் குழந்தையுடன் ஒவ்வொரு நொடியையும் செலவிட்டேன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். என் வாழ்க்கையில் இந்த வருடம் பயணம், எனது அழகான குடும்பத்துடன் செலவிட்ட மகிழ்ச்சியான நேரங்கள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.
மேலும் நான் பொய் சொல்லப் போவதில்லை. அம்மாவாக சில வேலைகள் மிகவும் சோர்வாக இருக்கிறது. நான் எதையும் மாற்ற விரும்பவில்லை. நன்றியுடனும் ஆசிர்வாதத்துடனும் 2023-ஆம் ஆண்டில் நிறைவான மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் நாம் விரும்பும் நபர்களுடன் அர்த்தமுள்ள நேரங்கள் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.