மேலும் அறிய

"உடம்பு எடை அதிகமானதால, என்னோட பிணத்தை கஷ்டப்பட்டு இறக்கினதா எழுதுனாங்க.." : அஞ்சு ஷாக் இண்டர்வியூ

நடிகை அஞ்சு என்றாலே நீ பாதி நான் பாதி கண்ணா என்ற பாடல் மனதில் நினைவுக்கு வரும். வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் அவர் நாயகியாக அறிமுகமானவர்.

நடிகை அஞ்சு என்றாலே நீ பாதி நான் பாதி கண்ணா என்ற பாடல் மனதில் நினைவுக்கு வரும். வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் அவர் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் ஹீரோயினாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகையாக திரையில் வலம் வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு வந்த அஞ்சு தனது இரண்டு வயதில் 1979 ஆம் ஆண்டில் உதிரிப்பூக்கள் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரம், துணை நடிகை கதாபாத்திரம் என நடித்த அவர் சித்தி, சூலம், செல்வி, மேகலா உள்ளிட்ட பிரபல சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது 45 வயதாகும் அவர் 1995 ஆம் ஆண்டு பிரபல நடிகர் டைகர் பிரபாகரனை காதல் திருமணம் செய்தார். இவர் ரஜினி நடித்த முத்து படத்தில் நடிகை மீனாவின் மாமாவாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் ஒரே வருடத்தில் பிரபாகரனை விவாகரத்து செய்தார் அஞ்சு. 

இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்தார். அவருடைய பேட்டியில் இருந்து...

”நான் முதன்முதலில் ஒரு கன்னடப் படத்தில் தான் ஹீரோயினாக நடித்திருந்தேன். அந்த ஹீரோயினுக்கு ஸ்விம்மிங், கார் ரேஸிங், டான்ஸ் எல்லாமே தெரியணும். அந்தப் படத்திற்காக நான் எல்லாமே கற்றுக் கொண்டேன். ஒரு காட்சியில் ஸ்விம் சூட் கொண்டுவந்து கொடுத்தார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரே போராட்டம். பாதி நாள் சூட் வெட்டியாகப் போனது. அப்புறம் காஸ்ட்யூம் டிசைனர் வந்து உங்களுக்கு எப்படி ஸ்விம் சூட் வேண்டும் என்று கேட்டனர். நான் அக்னி நட்சத்திரம் படத்தில் நிரோஷா அணிந்தது மாதிரி ஸ்விம் சூட் வேண்டும் என்று கேட்டேன். அதேபோல் தயார் செய்து கொடுத்தார்கள்.

எத்தனை ரூமர் என்னப் பத்தி..

எனக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்தாகத் தான் கருதுகிறேன். என்னைத் திருமணம் செய்து கொண்டவருக்கு என்னைவிட வயது ரொம்பவே அதிகம். என் அப்பாவின் வற்புறுத்தலால் நான் அவரைக் கல்யாணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்னர் தான் எனக்கு அவரின் உண்மையான முகம் தெரியவந்தது. அவருக்கு என்னைவிட அதிக வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நான் விவாகரத்து செய்தேன். ஆனால் அதற்குள் என் மகன் பிறந்துவிட்டான். இதனால் என் மகனுடன் நான் சென்னை வளசரவாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டேன். அப்போது திடீரென என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தன. நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். என் உடல் எடை காரணமாக என் சடலத்தை கஷ்டப்பட்டு இறக்கியதாவும் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. அதைப்பற்றி அறிந்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். நடிகையாக இருந்து ஃபீல்ட் அவுட் ஆனால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.

என்னைப் பற்றிய கிசுகிசு..

என்னைப் பற்றி ஒரு கிசுகிசு வந்தது. இயக்குநர் வசந்த் என்னை துரத்தி துரத்தி காதலிப்பதாக செய்தி வந்தது. அதைப் பார்த்து நான் அழுது தீர்த்தேன். அப்போது என்னை மகேந்திரன் சாரிடம் அழைத்துச் சென்றனர். மகேந்திரன் சார் என்னிடம்.. அடச்சீ எதுக்கு அழகுற. இதெல்லாம் உனக்கு பப்ளிசிட்டி என்று கடந்து போ என்றார். அது எனக்கு ஒரு ஐ ஓப்பனர் என்பேன். 

அப்புறம் என்னை இண்டஸ்ட்ரியில் நிறைய பாடி ஷேமிங் செய்தனர். என் உடல் வாகே அப்படித்தான். அதற்கு நான் என்ன செய்வேன். ஹீரோயினாக நடிக்கும்போது பாடி ஷேமிங் செய்தால் பரவாயில்லை. நான் காமெடி கேரக்டர்களில் நடித்த போதெல்லாம் பாடி ஷேமிங் செய்தனர். அதனால் எனக்கு சில நேரங்களில் மனது வலிக்கும். ஆனால் என்னை ஏளனம் செய்பவர்களிடம் புரிய வைக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டேன்”

இவ்வாறாக அஞ்சு கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
Embed widget