மேலும் அறிய
Advertisement
‛ஊத்துங்க ஒரு ரவுண்ட்...’ பறக்கும் போது மிதந்த அமலாபால்!
கோல்டல் விசா வந்தாச்சு, கோலாகலப்படுத்தியாச்சு... அப்புறம் என்ன பயணம் தான்! ஆனால், அந்த பயணத்தில் புதுவித சர்ச்சை வந்து ஏறிவிட்டது.
சிந்துநதியில் பார்த்த அமலாவை, மைனாவில் பார்த்த போது, அதுவா இது... என்கிற அளவிற்கு பிரமிப்பு இருந்தது. அடுத்தடுத்த படங்களும் அவருக்கு அப்படியே அமைந்தன. முன்னணி கதாநாயகியாக ஒரு கட்டத்தில் அவர் வளர்ந்து நின்ற போது, இயக்குனர் விஜய் உடன் காதல், பின்னர் கல்யாணம், பின்னர் விவாகரத்து என அவரது வாழ்க்கை வேறு ஒரு வழியில் பயணப்பட்டது. ஆனால், மீண்டும் நடிக்க வந்த அவர், அதன் பின் வேறு அமலாபாலாக காட்சியளித்தார்.
கவர்ச்சி கூடியது, கதை களம் மாறியது, செயல்பாட்டில் கூட சில நேரங்களில் மாற்றம் தெரிந்தது. ஆனாலும், அவரது கலைப்பணி பல்வேறு மொழிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தான், துபாய் அரசால் இந்திய சினிமா கலைஞர்கள் பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. தமிழ், மலையாளர் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
தமிழில் நடிகை த்ரிஷா, நடிகர் பார்த்திபன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றனர். சமீபத்தில் நடிகை அமலா பாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன்பு தான், அந்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்திருந்தார்.
View this post on Instagram
கோல்டல் விசா வந்தாச்சு, கோலாகலப்படுத்தியாச்சு... அப்புறம் என்ன பயணம் தான்! ஆனால், அந்த பயணத்தில் புதுவித சர்ச்சை வந்து ஏறிவிட்டது. விமானத்தில் முதல்தர பிசினஸ் இருக்கையில் பயணித்த அமலா பால், பச்சை நிற ஆடையோடு பளிச்சென தன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் விமானப் பணிப்பெண், அவரிடம் மதுபானம் வேண்டுமா என கேட்க, அவரும், ‛ஓகே’ சொல்ல, வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், மதுவை குடித்து மிதந்து கொண்டிருந்திருக்கிறார் அமலா பால்.
மது உள்ளே சென்ற பின், அவரது ஆடை குறைந்து, கிளாமர் மோட் திரும்பினார்.
View this post on Instagram
அந்த விமானத்தின் உள்அமைப்பே, வின்வெளி போன்று தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. குளுகுளு சூழலில், கையில் குவளையோடு குதூகலமாய் அமர்ந்திருந்த அமலாவிற்கு, மனம் நிறைய மகிழ்ச்சி. கோல்டன் விசா கிடைத்த மகிழ்ச்சியை அவர் அனுபவிக்கிறார். ஆனாலும், வழக்கம் போல, சிலர் விமர்சிக்கிறார்கள். மது குடிப்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாக எப்படி வெளியிடலாம் என்றெல்லாம் சாடுகிறார்கள். ஆனால், அது அவருக்கான விருப்பத்தை சார்ந்தது என்பதால், அதை கண்டு ரசித்து கடந்து போவது தான் சரி என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion