மேலும் அறிய

Deepika Padukone : தீபிகாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்.. விளாசிய ஆலியா பட்

திபீகா படுகோனின் கர்ப்பம் தொடர்பாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் நடிகை ஆலியா பட் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகை தீபிகா படூகோன் கருவுற்றிருப்பதுபோல் நடிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோன்

 முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படூகோன் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018-ஆம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம், தான் கருவுற்றிருக்கும் செய்தியை அறிவித்தார் தீபிகா. தீபிகா படுகோன் தற்போது பிரபாஸின் கல்கி 2898 படத்திலும் ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள சிங்கம் அகெயின் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தனது முதல் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க போதுமான ஓய்வு நேரத்தை ஒதுக்கி இருக்கிறார். இதனிடையில் அடுத்தடுத்து  பல்வேறு சர்ச்சைகள் அவரை சூழந்து வருகின்றன.

தீபிகா ரன்வீர் விவாகரத்து

தீபிகாவும் ரன்வீரும் தங்கள் திருமண உறவை முடித்துக்கொண்டு விவாகரத்து பெற இருப்பதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தீபிகாவுடனான திருமண புகைப்படங்களை நீக்கியது இந்த சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இது தொடர்பாக எந்த விளக்கமும் தீபகா மற்றும் ரன்வீர் சார்பாக அளிக்கப்படவில்லை. இதற்கடுத்தபடியாக தற்போது தீபிகா படுகோன் கருவுற்றிருப்பதைப்போல் நடிப்பதாக நெட்டிசன்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்கள்

தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவித்த ஆலியா பட்

சமீபத்தில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் மக்களவைத் தேர்தலில் தங்கள் வாக்குகளை சேர்ந்து பதிவு செய்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவில் கருவுற்ற வயிற்றோடு தீபிகா காணப்பட்டார். இந்த வீடியோ நெட்டிசன்களின் கண்களில் படவே தீபிகா கருவுற்றிருப்பதுபோல் நடிப்பதாக அவர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து தீபிகாவுக்கு பிரபலங்கள் ஆதரவு குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.

பிரபல பத்திரிகையாளர் ஃபாயெ டி செளஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்களை கடுமையாக திட்டி விமர்சித்திருந்தார். "தனது ஜனநாயக கடமையை ஆற்றவே தீபிகா பொது இடத்திற்கு வந்தார். அவரது உடலைப் பற்றியோ அவரது கர்ப்பத்தைப்  பற்றியோ கருத்து சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள்" என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த பதிவை பாலிவுட் நடிகை ஆலியா பட் லைக் செய்து தீபிகாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தீபிகாவின் முன்னாள் காதலனான ரன்பீர் கபூரை ஆலியா திருமணம் செய்துகொண்டுள்ளார். இதன் காரணத்தினால் இரு நடிகைகளையும் பொது இடங்களில் காண்பதோ , இருவரும் நேருக்கு நேர் உரையாடிக் கொள்வதோ மிகவும் அரிது.  தற்போது தீபிகாவின் மேல் எழுந்த முறையற்ற விமர்சனங்களை கண்டு அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் ஆலியா பட்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget