Sirakadikka Aasai :சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணுகாந்த்...பழைய ஹீரோ மாற்றப்படுகிறாரா? ரசிகர்கள் ஷாக்
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகர் விஷ்ணுகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.
தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் புதுமுக நாயகன் முத்துவாக நடித்து வருகிறார். வேலைக்காரன் சீரியல் புகழ் நடிகை கோமதி ப்ரியா நாயகியாக நடித்து வருகிறார். பிரபல தமிழ் நடிகர் சுந்தரராஜன் இந்த சீரியலில் நாயகனுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். மேலும் சில புதுமுக நடிகர்களும் இந்த தொடரில் நடிக்கிறார்கள், புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது TRP-யில் அதிக ரீச் பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஷ்ணுகாந்தை வைத்து சிறகடிக்க ஆசை சீரியல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் நாயகன் மாற்றப்படுகிறாரா என ஷாக் ஆகினர்.
ஆனால் உண்மை என்னவென்றால் சிறகடிக்க ஆசை சீரியல் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம். அதில் நாயகனாக சமீபத்தில் விவாகரத்து பிரச்சனையில் சிக்கிய நடிகர் விஷ்ணுகாந்த் நடிக்க இருக்கிறாராம். இது தொடர்பான போஸ்டை பார்த்த ரசிகர்கள் விஷ்ணுகாந்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் சிலர், இப்போதெல்லாம் அதிகமான தமிழ் நடிகர்கள் தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார்கள் என்று பதிவிட்டு சூப்பர் இமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கிய சிறிது நாட்களிலேயே மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற துவங்கியுள்ளது. அதற்கு காரணம் கதை அம்சம் தான். குறிப்பாக சீரியல்களை எடுத்துக்கொண்டால், சோகம், அழுகை, குழாய் அடி சண்டை, உடல் முழுவதும் நகைகளை வாரி போட்டுக் கொண்டு வரும் பில்டப் மாமியார்கள் என வழக்கமான கான்செப்டில் போரடிப்பதாய் இருக்கும்.
ஆனால் இந்த சீரியல் மேற்கூறிய கதைக்களங்களில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த சீரியலில் மாமியார் மருமகள் பிரச்சனை இருந்தாலும் அதை நாயகன் காமெடியாக ஹேண்டில் செய்வது ரசிகர்களை கவர்ந்துள்ளது. டாக்சி ஓட்டுநராக வரும் நாயகன் கலைந்த தலை, கசங்கிய சட்டை என மிகவும் இயல்பாக காட்டப்பட்டிருந்தாலும் தனது டைமிங் காமெடியை டெலிவரி செய்யும் விதத்தில் ஸ்கோர் செய்கிறார்.
ஹீரோயினும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற துணை கதாபாத்திரங்களும் ரசிக்கும் விதத்திலும், இயல்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த சீரியல் குறுகிய காலத்தியே டி.ஆர்.பியில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.
மேலும் படிக்க,