பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்..
நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் தங்களின் திருமண தேதியை அறிவித்துள்ளனர் .
"வெண்ணிலா கபடி குழு " மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் விஷ்ணு விஷால் . ‘பலே பாண்டியா,’ ‘ராட்ஷஸன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகனான இவர், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

LIFE IS A JOURNEY....
EMBRACE IT...

HAVE FAITH AND TAKE THE LEAP....

Need all your love and support as always...@Guttajwala#JWALAVISHED pic.twitter.com/eSFTvmPSE2
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) April 13, 2021

அதற்கு பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவைக் காதலிப்பதாக தெரிவித்த விஷ்ணு, கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவித்தார். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி தனது திருமணம் நிகழவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .