மேலும் அறிய

Kulasamy: கடைசி நேரத்தில் ரிலீசாகாமல் போன விமலின் குலசாமி படம் .. சோகத்தில் ரசிகர்கள்..என்ன காரணம்?

நடிகர் விமல் நடித்து இன்று வெளியாவதாக இருந்த குலசாமி படம் வெளியாகாததால் ரசிகர்கள் சோகமடைந்தனர். 

நடிகர் விமல் நடித்து இன்று வெளியாவதாக இருந்த குலசாமி படம் வெளியாகாததால் ரசிகர்கள் சோகமடைந்தனர். 

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம்  துணை வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல் நடிகராக அறிமுகமாகியிருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி படம் அவருக்கான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தூங்காநகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை,  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மன்னர் வகையறா, கன்னி ராசி என பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களால் அன்பாக கேலக்ஸி ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 

இப்படியான நிலையில் நடிகர் விமல் நடிப்பில் உருவான படம் “குலசாமி”. இந்த படத்தை நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவரும்,  தண்டாயுதபாணி, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சரவண சக்தி  இயக்கியுள்ளார். குலசாமி படத்தில் ஹீரோயினாக  தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், வினோதினி, மகாநதி ஷங்கர்,கர்ணராஜா, முத்துப்பாண்டி, ஜெயசூர்யாஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

குலசாமி படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராகவும், மக்களிடம் பிரபலமான ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் நடிகராகவும் அறிமுகமாகின்றனர். இதனைத் தவிர்த்து படத்தின் வசனங்களை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குலசாமி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் விமல் கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ள குலசாமி படம் இன்று தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இப்படத்திற்கு முன்பதிவும் சில தியேட்டர்களில் தொடங்கிய நிலையில், படம் ரிலீசாகவில்லை. இதுதொடர்பாக படக்குழு சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், குலசாமி படத்தை தியேட்டரில் வெளியிட உகந்த சூழல் இல்லாத காரணத்தால் படமானது மே 5 ஆம் தேதி ரிலீசாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விமல் ரசிகர்கள் சோகமடைந்தனர். 

அதேசமயம் விமல் நடிப்பில் இன்றைய தினம் தெய்வ மச்சான் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததே குலசாமி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: குலசாமி இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா... கலந்துகொள்ளாத விமல்... வருத்தம் தெரிவித்த இயக்குநர் அமீர்!

தலைப்பு செய்திகள்

சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி

வீடியோ

Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget