குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.

வெற்றிநடைபோடும் விமலின் மகாசேனா
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம் என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் காடு சார்ந்த ஆக்சன் திரில்லர் படமான மகாசேனா திரைப்படம், திரையிட்ட திரையரங்குகளி லெல்லாம் குடும்பங்களின் பேராதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.
மேலும் குலதெய்வ வழிபாடு, சமத்துவம், மனிதம் ஆகிய பல கருத்துக்களை முனைப்பில் வைத்து திரைக்கதையாக தொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ருஸ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் உட்பட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்துள்ளனர். குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி சொல்லும் இந்தக் கதையின் அடி நாதத்தை, படம் பார்க்க வரும் குடும்பத்தினரும் குறிப்பாக பெண்களும் கொண்டாடித் தீர்க்ககின்றனர்.
ஆக மொத்தத்தில் மகா சேனா திரைப்படம் மக்களின் பேராதரவுடன் மகத்தான வெற்றியுடன் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
நடிகர்கள் :
விமல் - செங்குட்டுவன்
சிருஷ்டி டாங்கே - பொம்மி
யோகிபாபு - சுருளி
ஜான் விஜய் - பிரதாப்
கபீர் துஹான் சிங் - கிங் ஆப் காட்ஸ்
மஹிமா குப்தா - கங்கா
விஜய் சேயோன் - இடும்பன்
அல்ஃப்ரெட் ஜோஸ் - காமராஜ்
சுபாங்கி ஜா - மைத்திலி
சிவகிருஷ்ணா - காளி
இலக்கியா - அல்லி
திரைப்படக்குழு :
எழுத்து & இயக்கம் - தினேஷ் கலைச்செல்வன்
ஒளிப்பதிவாளர் - மனாஸ் பாபு D R
இசை - A.பிரவீன் குமார்
பின்னணி இசை - உதய் பிரகாஷ் U P R
கலை இயக்குனர் - V S தினேஷ் குமார்
படத்தொகுப்பாளர் - நாகூரான் ராமச்சந்திரன்
சண்டைக்காட்சி - ராம்குமார்
பாடல் வரிகள் - தினேஷ் கலைச்செல்வன்,
பாபு வசிகர்மன்
உடை - ஹேமா
ஒப்பனை - ஆர்.கே
நடன இயக்குனர் - அமீர்
ஒலி வடிவமைப்பு - ராஜு ஆல்பர்ட்
விளம்பர வடிவமைப்பாளர் - தினேஷ் அசோக்
வண்ணக்கலைஞர் - ஜான் ஸ்ரீராம்
விஷுவல் எஃபெக்ட்ஸ் - வெற்றிச்செல்வன்
லிரிக்கல் வீடியோ - வீடியோ ப்ரொடக்ஷன்
மக்கள் தொடர்பு - ரேகா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
பவித்ரன் ஜாக்
பாபு வசிகர்மன்
மார்க் ஜெரோ
ஹரிகரன் R
கார்த்திக் செல்வராஜ்
கோகுல் சின்னசாமி
வசந்த்
R முகமது யூசப்
அமிர்தவர்ஷினி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு :
ரமேஷ் துரைக்கண்ணு
தினேஷ்குமார் வேல்முருகன்
சீயான் நவீன்
டிஜிட்டல் & புரோமோஷன்ஸ் :
டிஜிட்டல் பார்ட்னர் : புக் மை ஷோ, பேடிஎம்,
டிஸ்ட்ரிக்ட்
டிஜிட்டல் புரோமோஷன்ஸ் : அஹமத் அஸ்ஜாத்
கிரியேட்டிவ் புரோமோஷன்ஸ் : தேர்ட் ஐ மீடியா
நிர்வாக தயாரிப்பாளர் :
ராணி ஹென்ரி சாமுவேல்
தயாரிப்பு - மருதம் புரொடக்ஷன்ஸ்





















