மேலும் அறிய
Advertisement
கர்ணனின் வெற்றிக்காக நேரில் சென்று மாரி செல்வராஜை வாழ்த்திய விக்ரம்..
கர்ணன் படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் விக்ரம் .
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "கர்ணன்” அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. வலிமிகுந்த உண்மைகளை படம் முழுக்க சுமந்து வந்த அப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் அதிக வெற்றியை பெற்று வருகிறது . ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரைத்துறையினர் , அரசியல் பிரபலங்கள் படத்தை பார்த்து அவர்களின் வாழ்த்துக்களையும், உணர்வுகளையும் ட்வீட் செய்து வருகின்றனர் .
தற்போது, நடிகர் விக்ரம் ’கர்ணன்’ படம் பார்த்துவிட்டு நேரில் சென்று இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். அடுத்ததாக மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் வைத்து ஒரு கபடி விளையாட்டு சார்ந்த படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார் . கர்ணன் படத்தை பற்றி ரசிகர்களைப் போலவே சக சினிமா கலைஞர்களும் தொடர்ச்சியாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion