நடிகர் விக்ரமுடன் எம்.பி கார்த்தி சிதம்பரம்.. இணையத்தில் படுவேகமாக வைரலாகும் செல்ஃபி..!
நடிகர் விக்ரமும், எம்.பி கார்த்தி சிதம்பரமும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.பி கார்த்தி சிதம்பரமும் நடிகர் விக்ரமும் விமானத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான புகைப்படம் டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் விக்ரம் தங்கலான் லுக்கில் இருக்கிறார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படபிடிப்பில் சண்டை காட்சி ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். அவர் சிறிது காலம் இடைவேளைக்கு பின் மீண்டும் ஷூட்டிங்கில் பங்கு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு, காங்கிரஸ் மேலிட பொருப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் 15 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான பட்டியல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் இறுதி முடிவை சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி வேணுகோபால் ஆகியோர் தான் எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கார்த்தி சிதம்பரம் ராகுலிடம் தொலைப்பேசியில் பேசிய போது, காங்கிரஸ் கட்சியை முதன்மையானதாக மாற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுத்துள்ளதாக கூறினார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் ஓரிரு தினங்களில் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கார்த்தி சிதம்பரத்தின் மீது ராகுல் அதிருப்தியில் உள்ளதாகவும் கட்சியினர் சிலர் கூறுகின்றனர். இப்படி பல வேறுபட்ட தகவல்கள் வெளியாகும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் நடிகர் திரு @chiyaan அவர்களுடன் pic.twitter.com/FUIeL45P79
— Karti PC Office (@KartiPCoffice) June 27, 2023
மேலும் படிக்க
CM Stalin Speech: தமிழ்நாட்டில் புதியதாக 6 தொழிற்பேட்டைகள் - அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை