ICC ODI World Cup 2023: சென்னை சேப்பாக்கத்தில் எத்தனை போட்டிகள்..? இந்தியாவுக்கு ஒரே ஒரு மேட்ச்சா..? சோகத்தில் தமிழ்நாடு ரசிகர்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்தெந்த அணிகள், எப்போது மோதுகிறது என்ற பட்டியலை கீழே காணலாம்.
2023 ஆண்கள் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியானது அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. மேலும், அகமதாபாத் உள்ளிட்ட பத்து இடங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் 46 நாட்களுக்கு 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட்கள் நடைபெறுகிறது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மும்பையில் நவம்பர் 15ம் தேதியும், கொல்கத்தாவில் 16ம் தேதியும் நடைபெறுகிறது. இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்திற்கும் ரிசர்வ் நாட்கள் இருக்கும்.
இந்தநிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்தெந்த அணிகள், எப்போது மோதுகிறது என்ற பட்டியலை கீழே காணலாம்.
எம்.ஏ.சிதம்பரம் மைதானம் (சேப்பாக்கம்):
- அக்டோபர் 8 (ஞாயிற்றுக்கிழமை) - இந்தியா vs ஆஸ்திரேலியா
- அக்டோபர் 14 (சனிக்கிழமை)- நியூசிலாந்து vs வங்க தேசம்
- அக்டோபர் 18 (புதன் கிழமை)- நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்
- அக்டோபர் 23 (திங்கள் கிழமை ) -பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
- அக்டோபர் 27 (வெள்ளிக்கிழமை) - பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா
இந்திய அணி விளையாடும் போட்டி விவரங்கள் :
அதிகாரப்பூர்வ அட்டவணை
- இந்தியா vs ஆஸ்திரேலியா - அக்டோபர் 8, சென்னை
- இந்தியா vs ஆப்கானிஸ்தான் - அக்டோபர் 11, டெல்லி
- இந்தியா vs பாகிஸ்தான் - அக்டோபர் 15, அகமதாபாத்
- இந்தியா vs வங்கதேசம் - அக்டோபர் 19, புனே
- இந்தியா vs நியூசிலாந்து - அக்டோபர் 22, தர்மசாலா
- இந்தியா vs இங்கிலாந்து - அக்டோபர் 29, லக்னோ
- இந்தியா vs தகுதிச் சுற்று 2 - நவம்பர் 2, மும்பை
- இந்தியா vs தென்னாப்பிரிக்கா - நவம்பர் 5, கொல்கத்தா
- இந்தியா vs தகுதிச் சுற்று 1 - நவம்பர் 11, பெங்களூரு