Leo Update: ‘இன்று முதல் 30 நாட்களுக்கு லியோ அப்டேட் தான்’ .. விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன லோகேஷ்..!
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக லியோ படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அப்டேட் இன்று முதல் வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன்மீண்டும் கூட்டணி
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். லியோ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மிஷ்கின், சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், அனுராக் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன் என அனைத்து மொழியை சார்ந்த பிரபலங்களும் நடித்துள்ளனர்.
அக்டோபர் 19 படம் ரிலீஸ்
லியோ படத்தின் டைட்டில் வெளியாகும் போதே அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் வருவதால் கலெக்ஷனை அள்ளிவிடலாம் என படக்குழு அந்த தேதியை முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. மொத்த ஷூட்டிங்கும் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது.
வெளியான அப்டேட்டுகள்
லியோ படத்தின் முதல் அப்டேட் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியானது. அதன்படி அன்றைய தினம் 2 போஸ்டர்கள், விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சஞ்சய் தத் பிறந்தநாளன்று அவரின் ஆண்டனி தாஸ் கேரக்டரும், அர்ஜூன் பிறந்தநாளன்று அவரின் ஹரோல்ட் தாஸ் கேரக்டரும் வெளியானது. இந்நிலையில் லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத கால கொண்டாட்டம்
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற சைமா (SIIMA Awards 2023) விருதுகள் வழங்கும் விழாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்துக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவரிடம் ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டு கூச்சலிட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷூம் அதுபற்றி கேட்டார்.
#Leo update from Today guys 🎉🎉 🔥🔥 @Dir_Lokesh 😎 #SIIMA2023 @actorvijay ❤️
— TN 72 (@mentalans) September 17, 2023
#LeoUpdate #LeoFilm #LeoSecondSingle #Jawan #MarkAntony pic.twitter.com/NmcchTLSec
இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “லியோ படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால் அப்டேட் கொஞ்சம் லேட்டாக விடலாம் என முடிவு செய்திருந்தோம். அதாவது ரிலீசுக்கு 30 நாட்கள் முன்னாடி இருந்து அப்டேட் விடலாம் என்றே முடிவு செய்திருந்தோம். அதன்படி இன்று (செப்டம்பர் 17) முதல் லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.