Actor Vijay: 'நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்...அவரது கை அசைவிற்காக காத்திருக்கிறோம்' - ஆர்வமுடன் இருக்கும் ரசிகர்கள்
10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார் என அரவக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பேட்டி .
கரூர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்க அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள சித்தார்த்தா முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அரவக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் சதீஷ்குமார் கூறுகையில்:
மே 28 உலக பட்டின தினத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று யாரும் பட்டினி இருக்கக் கூடாது என்பதற்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டத. அதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னதானம் தொடங்கப்பட்டது.
மேலும், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தின் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க வைத்து அவர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவிக்க உள்ளார்.
தளபதி விஜய் சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தாலும் மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். கோடை காலத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கினோம். நடிகர் விஜய் வரவேண்டும் அவரது கை அசைவிற்காக காத்திருக்கிறோம்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்