மேலும் அறிய

‛மொத்த வரியும் செலுத்தியாச்சு... சொன்னதை எப்போ திரும்பப் பெறுவீங்க?: பிடிவாதம் காட்டும் விஜய்!

ரோல்ஸ் ராய்ஸுக்கு மொத்த வரியும் செலுத்திய நிலையில் இந்த வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நடிகர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸுக்கு மொத்த வரியும் செலுத்திய நிலையில் இந்த வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நடிகர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை பயன்படுத்துவதில்லை என்பதால் அந்த காருக்கான நுழைவுவரியை ரத்து செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

‛மொத்த வரியும் செலுத்தியாச்சு... சொன்னதை எப்போ திரும்பப் பெறுவீங்க?: பிடிவாதம் காட்டும் விஜய்!

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், வரியை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தார்.

தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது தீர்ப்பில் வரி என்பது நன்கொடை ஒன்றும் அல்ல. அது கட்டாயமாக செலுத்த வேண்டிய ஒன்று என்றும் கூறினார். இதுதவிர, சமூகநீதிக்காக பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகத்திற்கு சமம் என்றும் உத்தரவிட்டு நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தார்.

‛மொத்த வரியும் செலுத்தியாச்சு... சொன்னதை எப்போ திரும்பப் பெறுவீங்க?: பிடிவாதம் காட்டும் விஜய்!

தனி நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தியடைந்த நடிகர் விஜய் தன்மீதான விமர்சனத்தை நீக்க கோரியும், அவர் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இதையடுத்து, நடிகர் விஜயின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது. 

அதேசமயம், நடிகர் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை ஒரு வாரத்தில் வணிகவரித்துறை கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இதற்கிடையில், நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியாக ரூபாய் 8 லட்சத்தை செலுத்தியிருந்தார். இந்த நிலையில், மீதமுள்ள ரூபாய் 32 லட்சம் தொகையையும் நடிகர் விஜய் தற்போது செலுத்தியுள்ளார். இதனால், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரித்தொகையான மொத்தம் ரூபாய் 40 லட்சத்தையும் செலுத்திவிட்டார். 

‛மொத்த வரியும் செலுத்தியாச்சு... சொன்னதை எப்போ திரும்பப் பெறுவீங்க?: பிடிவாதம் காட்டும் விஜய்!

இந்நிலையில், நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியன், வரி தொடர்பாக தன் மீது முன்வைத்த விமர்சனங்களைத் திரும்பப் பெறுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷஃபீக் ஆகீயோர் அடங்கிய அமர்வு முன் நடிகர் விஜய் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடையார் புற்றுநோய் மையத்துக்கு தான் நண்கொடை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷஃபீக் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை ஒத்திவைத்துள்ளனர். தனக்கெதிரான கருத்தை நீதிபதி திரும்பப் பெற வேண்டும் என்பதில் விஜய் பிடிவாதமாகவே இருக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget