Vijay: நடிகர் சங்கத்திற்கு விஜய் ரூ.1 கோடி கடனாக கொடுக்கவில்லை! - கார்த்தி ஓபன் டாக்
நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகளுக்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் கடனாக இல்லாமல் நிதியுதவியாக விஜய் கொடுத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
![Vijay: நடிகர் சங்கத்திற்கு விஜய் ரூ.1 கோடி கடனாக கொடுக்கவில்லை! - கார்த்தி ஓபன் டாக் actor vijay Gave 1 Crore as Donation to Nadigar Sangam Building Renovation Vijay: நடிகர் சங்கத்திற்கு விஜய் ரூ.1 கோடி கடனாக கொடுக்கவில்லை! - கார்த்தி ஓபன் டாக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/08/5a457278696a702618997ab8ba356c011725791417732572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய்
நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகியது. முதல் நாளில் 126 கோடி வசூல் செய்த இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தயாராகி வருகிறார். வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்த மாநாடு நடக்க இருப்பதாக ஒருபக்கம் தகவல்கள் வெளியாகினாலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும்படி, தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் நிதியுதவிகளையும் செய்து மக்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்பாக நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இதுகுறித்து நடிகர் கார்த்தி தற்போது பேசியுள்ளார்
விஜய் பற்றி கார்த்தி
நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் கடனாக கொடுக்கவில்லை என்று நிதியுதவியாக அவர் கொடுத்ததாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் நாசர் தலைமியிலான நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. சென்னை தி நகரில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட இந்த நிர்வாக குழு முடிவு செய்தது. திருமண மண்டபம் , டப்பிங் ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகள் அடங்கிய கட்டிடத்தை கட்ட திட்டமிட்டார்கள் நிர்வாகக் குழுவினர். 2015 முதல் 2018 வரையிலான பதவிக் காலத்திற்குள் 75 சதவீதம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று இருந்தன.
இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டு நடிகர் சங்க கட்டிட பணிகளை உடனே தொடங்கியது நாசர் குழு. கட்டிடத்தை கட்டி முடிக்க வங்கியில் கடன் பெறுவதற்கான அனுமதியை பொதுக்குழுவிடம் பெற்றது. கடன் தருவதற்கு நடிகர் சங்கம் அறக்கட்டளையில் குறைந்தது 10 கோடி ரூபாய் நிதி இருப்பு இருக்க வேண்டும் என வங்கி சார்பாக நிபந்தனை வைக்கப் பட்டது . இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக பிரபலங்கள் நிதி வழங்கி வருகிறார்கள். இந்த கட்டிட பணிகளுக்காக விஜய் ஒரு கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)