Actor Vadivelu: மாமன்னன் தந்த மாபெரும் வெற்றி.. சீரியஸ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வடிவேலு..!
நடிகர் வடிவேலு மீண்டும் சீரியஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
நடிகர் வடிவேலு என்றாலே நமக்கு சட்டென நகைச்சுவை தான் நியாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு நகைச்சுவை கதாப்பத்திரங்களில் மிக சிறப்பாக நடித்து அசத்தக் கூடியவர் நடிகர் வடிவேலு. அவரின் உடல்மொழி, கண் அசைவு, வாய்ஸ் மாடிவ்லேஷன் என அத்தனையிலும் நகைச்சுவை நிறைந்திருக்கும்.
இதுவரை நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலுவை முதல் தடவையாக இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதியின் மாமன்னன் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, இன்னொரு பரிமாணத்தில் காட்டினார். இந்த படம் வெற்றி பெற்றதோடு வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடிகர் வடிவேலுவின் நடிப்பை பாரட்டினர்.
மாமன்னன்:
இதையடுத்து வடிவேலுக்கு தொடர்ந்து அதே மாதிரியான வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. நகைச்சுவை வேடங்களில் நடிக்க இயக்குனர்கள் யாரும் வடிவேலை அணுகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு வரும் கதைகளை கவனமாக கேட்டு வருகிறாராம் வடிவேலு.
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படமொன்றிலும் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் மாமன்னன் படம் போன்று அரசியல் கதை என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியஸ் வேடங்களில் வடிவேலு:
மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் இன்னொரு படத்திலும் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு தற்போது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நடிகர் சந்தானம் கதாநாகனாக நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகர் சூரியும் விடுதலை திரைப்படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காமெடிக்கான வெற்றிடத்தை நிரப்ப நடிகர் வடிவேலு மீண்டும் வந்து விட்டார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் வடிவேலு சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,